இத்தாலி திரும்பிய ரொனால்டோ 14 நாள் சுய தனிமைப்படுத்தலில்

175
Ronaldo

தனது தாய்நாடான போர்த்துக்கலில் இருந்து இத்தாலி திரும்பி இருக்கும் ஜுவன்டஸ் கால்பந்து  கழக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தொற்றுக்கான இரண்டு வார சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தபோதே ரொனால்டோ இரண்டு மாதங்களுக்கு முன் போர்த்துக்கலில் தனது சொந்த ஊரான மடைராவுக்கு சென்றார்

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ…

இந்நிலையில் ஜுவன்டஸ் கழகம் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியிருக்கும் நிலையில் ரொனால்டோ வரும் மே 15ஆம் திகதி அணியுடன் இணைய எதிர்பார்த்துள்ளார்.  

இத்தாலியின் பல பிராந்தியங்களும் பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்த நிலையில் கடந்த மே 04 ஆம் திகதி கால்பந்து கழகங்கள் தமது பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இத்தாலி அரசு திகதி நிர்ணயித்திருந்தது. இதனால் கொவிட்-19 அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டு வீரர்களை ஜுவன்டஸ் கழகம் திரும்ப அழைத்துள்ளது.  

இவ்வாறு இத்தாலி திரும்பும் வீரர்கள் தமது பயிற்சியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன் இத்தாலி வந்த பின் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது

இந்நிலையில் 35 வயதான ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் இத்தாலியின் டூரின் நகரை அடைந்துள்ளனர் என்பதோடு அவரது சக வீரர்கள் பலர் மீதும் ஜுவான்டஸ் பயிற்சி மையத்தில் வைத்து கொரானா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஆரோன் ரம்சி, பெடெரிகோ பெர்னார்டென்சி, ஜுவான் குவாட்ராடோ, கார்லோ பின்சொக்லி மற்றும் உபாதையில் இருந்து மீண்டு வந்திருக்கும் மெரிஹ் டெமிரல் ஆகிய வீரர்கள் மருத்துவ சோதனைக்கு உள்ளாகியுள்ளனர்

பல வீரர்கள் ஜுவன்டஸ் விளையாட்டு மையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை (05) பயிற்சிக்குத் திரும்பியுள்ளனர். அணித்தலைவரான 35 வயது சிலினி மற்றும் பின்கள வீரர் லியோனார்டோ பொனூசி கறுப்பு நிற முகக் கவசங்களை அணிந்தவாறு காலையிலேயே பயிற்சிக்கு திரும்பியதை காண முடிந்தது. மேலும் பல வீரர்கள் செவ்வாய்க்கிழமை மதியம் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர்

ஜுவன்டஸ் கழகத்துடன் இத்தாலியின் முன்னணி கழகங்களான அட்லான்டா, பொலொக்னா மற்றும் உடினேசே கழகங்களும் செவ்வாயன்று தமது பயிற்சிகளை ஆரம்பித்தன

எனினும் சமூக விலகல் நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் நிலையில் வீரர்கள் சுய பயிற்சிகளிலேயே ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பாதுகாப்பான சூழல் திரும்பிய பின் இந்தப் பருவத்திற்காக போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆதரவாக 20 சீரி A கழகங்களும் வாக்களித்துள்ள நிலையிலேயே பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கால்பந்து போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து இன்னும் நிச்சயமில்லாத நிலை உள்ளது.  

அணிகளுக்கான விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த அரசு முடிவு செய்தபோதும், கால்பந்து போட்டிகள் விரைவில் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று இத்தாலி விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சென்சோ சபடபோரா குறிப்பிட்டுள்ளார்.  

அரசு சில விளையாட்டுகளை ஒருசில மாதங்களுக்கு தடை விதிக்கும் அச்சம் இருப்பதாக இத்தாலி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கப்ரின் க்ரவினா எச்சரித்துள்ளார். அவ்வாறான ஒரு நடவடிக்கை இத்தாலி கால்பந்தின் சாவு காலமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தப் பருவம் ஆரம்பிப்பதற்காக பல மாதங்கள் காத்திருப்பதற்கு தயாராக இருப்பதாக லாசியோ கழக விளையாட்டுப் பணிப்பாளர் இக்லி டாரே தெரிவித்துள்ளார்.

ரொனால்டோக்களில் சிறந்தவர் யார்? : முன்னாள் வீரரின் கணிப்பு

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான….

விளையாட்டுத் துறை அமைச்சர் இந்த வாரம் வெளியிட்ட உத்தரவை நான் கேட்டேன். ஆனால் அது அவரது அதிகாரத்திற்குள் இருக்காது. இந்த நாட்காட்டி ஆண்டுக்குள் லீக்குகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று FIFA, UEFA மற்றும் UEFA விளக்கியுள்ளது.   

ஜூன் மாதத்தில் லீக் போட்டிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால் அது சாத்தியமான நேரத்தில் நாம் அதனை நடத்துவோம்என்று இக்லி டாரே குறிப்பிட்டார்

எவ்வாறாயினும் தமது கால்பந்து லீக்குகளை ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவை அறிவிப்பதற்கு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களுக்கு வரும் மே 25 ஆம் திகதி வரை UEFA கெடு விதித்துள்ளது. அவ்வாறு போட்டிகளை ஆரம்பிப்பதாக இருந்தால் எந்த திகதியில் எவ்வாறான வடிவில் நடத்துவது என்பது பற்றி அறிவிக்கவும் UEFA அறிவுறுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி 29 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் தற்போது அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு தணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>Embed the link with this caption – மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<