Home Tamil மே.தீவுகளை வீழ்த்தி வெற்றிக் ஓட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா

மே.தீவுகளை வீழ்த்தி வெற்றிக் ஓட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா

ICC Men’s T20 World Cup 2021

219

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண சுபர் 12 லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இதன்மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை சந்தித்தது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (26) டுபாயில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பானுக, அசலங்கவின் அசத்தலால் அபார வெற்றியை பதிவுசெய்த இலங்கை

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப வீரர்கள் எவின் லுவிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகிய இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் எவின் லுவிஸ் அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, லிண்டல் சிம்மன்ஸும் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில், நிக்கொலஸ் பூரான் ஆகிய இருவரும் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த அணித்தலைவர் கிரென் பொல்லார்ட் சற்று அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுக்களையும், கேசவ் மஹராஜ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணிக்கு டெம்பா பவுமா 2 ஓட்டங்களில் ரன்அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரீஷா ஹென்ட்ரிக்ஸ் – ரஸ்ஸி வான் வென்டர்டஸன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் ஹென்ட்ரிக்ஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் அரைச்சதம் கடந்து அசத்தினார்.

T20 உலகக்கிண்ணத்தில் தனித்துவமான சாதனையை படைத்த முஜீப்

இதன்மூலம் தென்னாபிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வான் வென்டர்டஸன் 51 பந்துகளில் 43 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்பிரிக்க அணி, குழு 1இல் இரண்டு புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறத்தில் 2 தோல்விகளை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<


Result


South Africa
144/2 (18.2)

West Indies
143/8 (20)

Batsmen R B 4s 6s SR
Lendl Simmons b Kagiso Rabada 16 33 0 0 48.48
Evin Lewis c Kagiso Rabada b Keshav Maharaj 56 35 3 6 160.00
Nicholas Pooran c David Miller b Keshav Maharaj 12 7 2 0 171.43
Chris Gayle c Heinrich Klaasen b Dwaine Pretorius 12 12 0 1 100.00
Kieron Pollard c Rassie van der Dussen b Dwaine Pretorius 26 20 2 1 130.00
Andre Russell b Anrich Nortje 5 4 1 0 125.00
Shimron Hetmyer run out (David Miller) 1 2 0 0 50.00
Dwayne Bravo not out 8 5 1 0 160.00
Hayden Walsh c Reeza Hendricks b Dwaine Pretorius 0 1 0 0 0.00
Akeal Hosein not out 0 0 0 0 0.00


Extras 7 (b 0 , lb 2 , nb 1, w 4, pen 0)
Total 143/8 (20 Overs, RR: 7.15)
Fall of Wickets 1-73 (10.3) Evin Lewis, 2-87 (12.2) Nicholas Pooran, 3-89 (13.2) Lendl Simmons, 4-121 (17.1) Chris Gayle, 5-132 (18.2) Andre Russell, 6-133 (18.4) Shimron Hetmyer, 7-137 (19.2) Kieron Pollard, 8-137 (19.3) Hayden Walsh,

Bowling O M R W Econ
Aiden Markram 3 1 22 0 7.33
Kagiso Rabada 4 0 27 1 6.75
Anrich Nortje 4 0 14 1 3.50
Keshav Maharaj 4 0 24 2 6.00
Tabraiz Shamsi 3 0 37 0 12.33
Dwaine Pretorius 2 0 17 3 8.50


Batsmen R B 4s 6s SR
Temba Bavuma run out (Andre Russell) 2 3 0 0 66.67
Reeza Hendricks c Shimron Hetmyer b Akeal Hosein 39 30 4 1 130.00
Rassie van der Dussen not out 43 51 3 0 84.31
Aiden Markram not out 51 26 2 4 196.15


Extras 9 (b 0 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 144/2 (18.2 Overs, RR: 7.85)
Fall of Wickets 1-4 (0.6) Temba Bavuma, 2-61 (9.2) Reeza Hendricks,

Bowling O M R W Econ
Akeal Hosein 4 0 27 1 6.75
Ravi Rampaul 3 0 22 0 7.33
Andre Russell 3.2 0 36 0 11.25
Hayden Walsh 3 0 26 0 8.67
Dwayne Bravo 4 0 23 0 5.75
Kieron Pollard 1 0 9 0 9.00