மே.இ.தீவுகளுக்கெதிரான அவுஸ்திரேலிய ஒருநாள் குழாம் அறிவிப்பு

76
Fraser-McGurk

மேற்கிந்திய தீவுகளை அடுத்த மாத ஆரம்பத்தில் எதிர்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலியாவின் ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அவுஸ்திரேலியா சென்றிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது அங்கே நடைபெறும் டெஸ்ட் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. 

>> இந்திய டெஸ்ட் தொடரில் முக்கிய வீரரை இழக்கும் இங்கிலாந்து

ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அவுஸ்திரேலிய ஒருநாள் குழாத்தில் அனுபவ சகலதுறைவீரரான கிளன் மெக்ஸ்வெலிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது 

இதேநேரம் இளவயது துடுப்பாட்டவீரரான ஜேக் பிரேஸர்மெக்கேர்க் மேற்கிந்திய தீவுகள் தொடர் மூலம் ஒருநாள் அறிமுகத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 21 வயது நிரம்பிய பிரேஸர்மெக்கேர்க் அண்மையில் List A போட்டிகளில் 29 பந்துகளில் சதம் விளாசி சாதனை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் பிக் பேஷ் லீக் தொடரின் இந்தப் பருவத்தில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளரான சேவியர் பார்ட்லேட்டும் அவுஸ்திரேலிய ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். பார்ட்லேட் ஜை ரிச்சர்ட்ஸனின் உபாதை பிரதியீடாக அவுஸ்திரேலிய ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலியமேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி மெல்பர்னில் ஆரம்பமாகுகின்றது. 

அவுஸ்திரேலிய குழாம் 

ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அப்போட், நதன் எல்லிஸ், கெமரூன் கீரின், ஆரோன் ஹார்டி, ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஷ், மார்னஸ் லபச்சேன், ஜேக் பிரேஸர்மெக்கேர்க், லான்ஸ் மொர்ரிஸ், சேவியர் பார்ட்லேட், மேட் சோர்ட், அடம் ஷம்பா 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<