இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள்

145
Source - Getty Images

ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித்  தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது.  நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை.

இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓரு போட்டி மாத்திரமே வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. ஈபூரா முனிஸிபல் அரங்கத்தில் (Ibura Municipal Stadium) நடைபெற்ற ஏய்பர் (Eibar) கால்பந்து கழகத்திற்கும், லெகனஸ் கால்பந்து கழகத்திற்குமான போட்டியில் ஏய்பர் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் சவாலானதொரு வெற்றியை பெற்றது. இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தையே போட்டியின் இறுதிவரை தமது எதிரணிக்கு வழங்கினர். போட்டியின் முதல் பாதி எவ்வித கோலும் பெறாத நிலையில் முடிவடைந்தபோது, இரண்டாம் பாதியின் 53 ஆவது நிமிடத்தில் ஏய்பர் அணியின் பின்கள வீரர் அலெஜேன்ட்ரோ கெல்வெஸ் (Alejandro Galvez), தமது அணியின் சக வீரரான டகாஸீ இனுய் (Takasi Inui) மூலம் லெகனஸ் அணியின் பெனால்டி எல்லையினுள் உள்ளனுப்பப்பட்ட பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். இந்த கோலின் மூலம் ஏய்பர் அணி தனது சொந்ந மைதானத்தில் கடுமையானதொரு போட்டியின் பின்னர் வெற்றியை பெற்றனர்.

அதே தினம் நடைபெற்ற றியல் பெடிஸ் (Real Betis) மற்றும் டிபோர்டிவோ கழகங்கள் மோதிய போட்டியில் றியல் பெடிஸ் அணி வெற்றி பெற்றது மற்றுமன்றி, சிறந்த பந்து பரமாற்றங்களிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. றியல் பெடிஸ் அணிக்காக ஜக்குயீன் ஸன்செஸ் (JoaQuin Sanchez) 14 ஆவது மற்றும் 76 ஆவது நிமிடங்களில் இரு கோல்களும், டிபோர்டிவோ அணிக்காக அவ்வணியின மத்திய கள வீரரான பெப்ரீகோ கார்டாபியா (Febrico Cartabia) மூலம் ஒரு கோலும் பெறப்பட்டது.

ஜொப் மைக்கலின் இரட்டை கோலினால் ரினௌன் அணிக்கு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான இறுதிப்..

அதனை தொடர்ந்து நடந்த லெவன்டே (Levante) மற்றும் வெலன்சியா (Valencia) அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. இவ்விரு அணிகளும் நடப்பு சம்பியன் றியல் மட்றிடுடன் மோதிய போட்டிகளையும் வெற்றி தோல்வியின்றியே நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் நடந்த மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியாக பார்சிலோனா அணி கெடாபெய் (Getafe) அணியுடன், கெடாபெய் அணியின் மைதானமான கோலிசிம் ஆல்பேன்ரோ பெரெஸ் அரங்கத்தில் (Colisium Alfonso Perez) மோதிய போட்டியை குறிப்பிடலாம். போட்டியை விறுவிறுப்பாக ஆரம்பித்த பார்சிலோன அணிக்கு, போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் காகு ஸிகாஸ்கி (Gagu shikaski) மூலம் கெடாபெய் அணிக்கு அதிரடியாக பெறப்பட்ட கோலின் மூலம் இப்போட்டி சற்று கடுமையானதொரு போட்டியாக மாறியது. அதனைத் தொடர்ந்து போட்டியை சமநிலைப்படுத்த பார்சிலோனா அணி வீரர்கள் பாரிய முயற்சி எடுத்தும், அம்முயற்சிகள் கொடபெய் அணியின் கோல்காப்பாளர் மற்றும் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

எனினும் போட்டியின் 60 ஆவது நிமிடத்தில் கெடாபெய் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் விடப்பட்ட தவறை சிறந்த முறையில் பயன்படுத்திய பார்சிலோனா அணியின் மத்திய கள வீரர் ஸர்ஜீயொ ரொப்பேடொ (Sergio Roberto) தான் பெற்ற பந்தை தரை வழியாக பெனால்டி எல்லையில் இருந்த மாற்று வீரராக களமிறங்கிய டெனிஸ் ஸீவாரெஸிடம் (Denis Suarez) வழங்கினார். பந்தை பெற்ற டெனிஸ் ஸீவாரேஸ் கோலின் இடது பக்கத்தின் வழியாக பந்தை கோல் கம்பத்தினுள் உட்செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் போட்டியை வெற்றி பெற கடும் முயற்சி எடுத்தனர். போட்டியின் 84 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்சி மூலம் பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற மாற்று வீரர் போலீனோ (Paulinho) கெடாபெய் அணியின் பின்கள வீரர்களை சிறந்த முறையில் கடந்து, பந்தை கோலின் இடதுபக்க மூலையினால் வேகமாக உதைந்து கோலாக்கினார். கடைசி தருணத்தில் பெறப்பட்ட இந்த கோலின் மூலம் பார்சிலோனா அணி இப்போட்டியில் வெற்றியீட்டியது. அத்துடன் இப்போட்டியில் பார்சிலேனா அணிக்காக கோல்களை பெற்ற இருவரும் மாற்று வீரர்களாக களமிறக்கப்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

17 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. அட்லடிகோ மட்றிட் அணியின், வன்டா மெட்ரொபோலினோ அரங்கில் (Wanda Metropolina Stadium) நடைபெற்ற அட்லடிகோ மட்றிட் மற்றும் மலாகா அணிகள் மோதிய போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட கோலின் மூலம், அட்லடிகோ மட்றிட் அணி வெற்றி பெற்றது. தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அட்லடிகோ மட்றிட் அணியால் 60 நிமிடங்கள் கடந்த பின்னரே கோலைப் பெற முடிந்தது. இரு அணிகளுக்கும் சிறந்த பல

போராட்டத்தின் பின் கெலிஓய அணியை வீழ்த்திய குரே

பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான ( டிவிஷன் 1) கால்பந்து சுற்றுப் போட்டியில் கெலிஓய கால்பந்துக்..

வாய்ப்புக்கள் கிட்டியபோதும் அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை. போட்டியின் இறுதிவரை அதிகளவு ஆதிக்கம் செலுத்திய அட்லடிகோ மட்றிட் அணிக்கு 60 ஆவது நிமிடத்தில் மலாகா அணியின் பின்களத்தின் வலதுபக்க மூலையிலிருந்து ஏஞ்சல் குரேஹா (Angel Correa) மூலம் வழங்கப்பட்ட பந்தை, அன்டோனியோ கிரிஸ்மன் (Antonie Grizzeman) கோலின் வலதுபக்க மூலையால் கோலினுள் உட்செலுத்தி கோலாக்கினார். இந்த கோலின் மூலம் அட்.மட்றிட் அணி பாரிய போராட்டத்தின் பின் வெற்றியை தனதாக்கியது.

அதனை தொடர்ந்து அதே தினம் நடைபெற்ற ஜீரோனா மற்றும் செவில்லா அணிகள் மோதிய போட்டியில் போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் லுயிஸ் மூயிரீயல் (Luis Muriel) மூலம் பெறப்பட்ட கோலால் செவில்லா அணி வெற்றி பெற்றது. ஜீரோனா கழகத்தின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் கடைசி தருணத்தில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பையும் சிறந்த முறையில் பயன்படுத்த தவறியது ஜீரோனா கழகம்.

மேலும் லஸ் பல்மஸ் (Las Palmas ) மற்றும் அத்.பில்பாகு (Ath. Bilbao) அணிகள் மோதிய போட்டியில் லஸ் பல்மஸ் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்திலும், அலவெஸ் மற்றும் விலரல் அணிகள் மோதிய போட்டியில், விலரல் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் அன்றைய தினம் வெற்றி பெற்றன.

றியல் மட்றிட் அணியின் முக்கிய வீரர்களான பென்ஸமா, ரோனால்டோ, டொனி குருஸ் மற்றும் மார்ஸலோ ஆகிய வீரர்கள் விளையாடாத நிலையில், எதிரணியின் அரங்கில் நடைபெற்ற போட்டியில் றியல் மட்றிட் அணி வெற்றி பெற்றது. 18 ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் றியல மட்றிட் மற்றும் றியல் சொசிடட் (Real Sociedad) அணிகள் அனோஎடா அரங்கில் (Anoeta Stadium) பலப்பரீட்சை நடாத்தின. றியல் மட்றிட் அணிக்காக போயா மயூரல் (Borja Mayoral) போட்டியின் 19 ஆவது நிமிடத்திலும், கரெத் பேல் (Gareth Bale) மூலம் போட்டியின் போட்டியின் 61 ஆவது நிமிடத்திலும் அத்துடன் றியல் சொசிடட் அணி வீரரான கெவின் ரொட்ரிகஸ் (Kevin Rodriguez) மூலம் போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் ஒரு ஒன் கோலும் (Own Goal) பெறப்பட்டது.

அதேவேளை றியல் சொசிடட் அணிக்காக கெவின் ரொட்ரிகஸ் ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார். போட்டியில் கவர்ச்சியான கோலாக கரெத் பேல் மூலம் பெறப்பட்ட கோல் அமைந்தது. காரணம் யாதெனில் ஈஸ்கோ (Isco) மூலம் மத்திய களத்திலிருந்து றியல் சொசிடட் அணியின் பின்களத்திற்குள் வழங்கப்பட்ட பந்தை கரெத் பேல், றியல் மட்றிட் அணியின் மத்திய களத்தின் பின் எல்லையிலிருந்து மிகவேகமாக சென்று, றியல் சொசிடட் அணி

டான் கிண்ண சம்பியனாக முடிசூடிய சீலாமுனை யங் ஸ்டார்

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரனையோடு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து..

வீரர்களையும் தாண்டி சிறந்த முறையில் பந்தை பெற்று கோலினுள் உட்செலுத்தினார். றியல் சொசிடட் அணி இப்போட்டியில் தோல்வியுற்றாலும், றியல் மட்றிட் அணிக்கு தனது சொந்த மைதானத்தில் சவால் கொடுத்த போட்டியாகவே அமைந்திருந்தது.

மேலும் 19 ஆம் திகதி இஸ்பான்யல் மற்றும் ஸெல்டாவிகோ அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியானது இஸ்பான்யல் கழகத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கூறப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல் பின்வருமாறு,

நிலை அணி போட்டி

கள்

வெற்றி சமநிலை தோல்

வி

பெ.  கோல்கள் எ. பெ.
கோல்கள்
புள்ளி

கள்

1 பார்சிலோனா 4 4 0 0 11 1 12
2 செவில்லா 4 3 1 0 6 1 10
3 றியல் சொசிடட் 4 3 0 1 11 7 9
4 றியல் மட்றிட 4 2 2 0 9 4 8
5 அட்.மட்றிட 4 2 2 0 8 3 8
6 அத். பில்பாகு 4 2 1 1 3 1 7
7 விலரல் 4 2 0 2 6 5 6
8 லெவன்டே 4 1 3 0 5 4 6
9 வெலன்சியா 4 1 3 0 4 3 6
10 லெகனஸ் 4 2 0 2 3 3 6
11 லஸ் பல்மாஸ் 4 2 0 2 5 7 6
12 றியல் பெடிஸ் 4 2 0 2 5 7 6
13 ஏய்பர் 4 2 0 2 2 4 6
14 கேடாவேய் 4 1 1 2 3 4 4
15 ஜீரோனா 4 1 1 2 3 5 4
16 செல்டாவிகோ 3 1 0 2 4 5 3