Home Tamil இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தோல்வி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தோல்வி

120

பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய மகளிர் T20 கிரிக்கெட்  தொடரில் செவ்வாய்க்கிழமை (02) நியூசிலாந்தினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி அப்போட்டியில் 45 ஓட்டங்களால் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றது.

பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட்; முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

இத்தொடருக்கான குழு B இல் காணப்படும் இலங்கை அணி, தமது முதல் போட்டியில் இங்கிலாந்தினை எதிர்கொண்டு அப்போட்டியிலும் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான தோல்வி இலங்கை அணிக்கு தொடரில் இரண்டாவது தோல்வியாக மாறியுள்ளது.

நியூசிலாந்து – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி பேர்மிங்கம் எட்ஜ்பாஸ்டன் அரங்கில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவி சோபி டிவைன் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 32 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஒசாதி ரணசிங்க 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

17 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது, மிகவும் மோசமான ஆரம்பத்தினை பெற்றதோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 35 பந்துகளுக்கு 3 பௌண்டரிகள் அடங்கலாக ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சு சார்பில் ஹேய்லி ஜென்சன் வெறும் 05 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஈடன் கார்சன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழு B அணிகளுக்கான மற்றைய மோதலில் தென்னாபிரிக்க மகளிர் அணியினை இங்கிலாந்து 26 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand Women
147/7 (20)

Sri Lanka Women
102/8 (20)

Batsmen R B 4s 6s SR
Sophie Devine c Kavisha Dilhari b Inoka Ranaweera 24 23 3 1 104.35
Suzie Bates c Anushka Sanjeevani b Oshadi Ranasinghe 34 32 4 0 106.25
Amelia Kerr b Inoka Ranaweera 7 7 1 0 100.00
Maddy Green c Anushka Sanjeevani b Oshadhi Ranasinghe 9 8 1 0 112.50
Brooke Halliday c Chamari Athapaththu b Inoka Ranaweera 22 23 2 0 95.65
Hayley Jensen st Anushka Sanjeewani b Kavisha Dilhari 3 3 0 0 100.00
Isabella Gaze run out (Nilakshi de Silva) 16 14 1 0 114.29
Lea Tahuhu not out 20 8 2 1 250.00
Hannah Rowe not out 4 3 0 0 133.33


Extras 8 (b 1 , lb 0 , nb 1, w 6, pen 0)
Total 147/7 (20 Overs, RR: 7.35)
Bowling O M R W Econ
Sugandika Kumari 4 0 30 0 7.50
Oshadi Ranasinghe 4 0 31 2 7.75
Ama Kanchana 2 0 10 0 5.00
Inoka Ranaweera 4 0 30 3 7.50
Kavisha Dilhari 3 0 21 1 7.00
Chamari Athapaththu 3 0 24 0 8.00


Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu b Hayley Jensen 0 4 0 0 0.00
Vishmi Gunaratne c Maddy Green b Hannah Rowe 3 9 0 0 33.33
Hasini Perera c Hannah Rowe b Hayley Jensen 8 19 1 0 42.11
Harshitha Samarawickrama c Isabella Gaze b Rosemary Mair 5 8 1 0 62.50
Nilakshi de Silva c Maddy Green b Amelia Kerr 36 35 3 1 102.86
Kavisha Dilhari lbw b Eden Carson 4 5 1 0 80.00
Ama Kanchana c Hannah Rowe b Eden Carson 8 11 1 0 72.73
Anushka Sanjeewani b Hayley Jensen 2 4 0 0 50.00
Oshadi Ranasinghe not out 18 21 1 0 85.71
Sugandika Kumari not out 5 6 1 0 83.33


Extras 13 (b 5 , lb 2 , nb 2, w 4, pen 0)
Total 102/8 (20 Overs, RR: 5.1)
Bowling O M R W Econ
Hayley Jensen 4 1 5 3 1.25
Lea Tahuhu 4 0 14 0 3.50
Hannah Rowe 1 0 7 1 7.00
Rosemary Mair 2 0 13 1 6.50
Eden Carson 4 0 30 2 7.50
Amelia Kerr 4 0 22 1 5.50
Sophie Devine 1 0 4 0 4.00



முடிவு – நியூசிலாந்து 45 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<