இந்திய கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

277

இந்தியாவில் இடம்பெறும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்காக விளையாடிய முன்னாள் வீரரான ராஜேஷ் கோட்கே, நேற்று (13) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக இந்திய வீரர் மீது குற்றச்சாட்டு

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான…

தற்போது 44 வயதான ராஜேஷ் கோட்கே 1999-2000 காலப்பகுதிகளில் கோவா ரஞ்சி அணியில் விளையாடியவர். எனினும், சமீபகாலமாக அவர் அணிக்குத் தேர்வாகவில்லை என்பதால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்த நிலையில், மர்கோவா நகரில் உள்ள ராஜேந்திர பிரசாத் மைதானத்தில் நேற்று மாலை ராஜேஷ் கோட்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 30 ஓட்டங்களை எடுத்து விளையாடி வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆடுகளத்தில் சரிந்தார்.

இதையடுத்து, சகவீரர்கள் அனைவரும் அவரை தூக்கிக் கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மர்கோவா கிரிக்கெட் கழகத்தின் செயலாளர் பூர்வ் பெம்ரே கூறுகையில், ”ராஜேஷ் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். கோவா மாநிலத்துக்காக ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் ராஜேஷ் விளையாடியுள்ளார். ராஜேஷ் இறந்தது கோவா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்” எனத் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<