இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்கஸ் டிரஸ்கொதிக் 27 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி இங்கிலாந்தின் கெய்ன்சமில் பிறந்த மார்கஸ் டிரஸ்கொதிக் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டார். தன்னுடைய திறமையின் மூலம் தனது 18ஆவது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்தார். இதில் சிறப்பான துடுப்பாட்ட திறனை வெளி உலகிற்கு கொண்டுவந்ததன் மூலம் 2000ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தனது 25ஆவது வயதில் ஒருநாள் கிரிக்கெட் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.
மீண்டும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் தந்துள்ள இலங்கை
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டர்ஹாம்….
ஒருநாள் அறிமுகத்தின் பின்னர் அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக மென்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். இவ்வாறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மார்கஸ் டிரஸ்கொதிக் விளையாடிவந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிய வடிவில் 2005ஆம் ஆண்டு பெப்ரவரியில் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, கடந்த 2005 ஜூன் 13ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சவுத்தம்டனில் நடைபெற்ற போட்டியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் 200 யிற்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான தொடரினைத் தொடர்ந்து மூவகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இவர் ஓய்வு பெற்றார்.
மொத்தமாக 123 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 21 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 4,335 ஓட்டங்களையும், 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள், 29 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 5,825 ஓட்டங்களையும், 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி அதில் 2 அரைச் சதங்களுடன் 166 ஓட்டங்களையும் சர்வதேச போட்டிகளுக்காக இவர் பதிவு செய்துள்ளார்.
ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில்…
டிரஸ்கொதிக் 2006ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தும் 13 வருடங்களாக சமர்செட் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது 43 வயதை எட்டியுள்ள இவர் தான் முழு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு செய்தியை அறிவித்துள்ள மார்கஸ் டிரஸ்கொதிக், ‘‘கடந்த 27 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். இதில் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து விளையாடினேன். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. எனவே, இப்போது ஓய்வு பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 391 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்கஸ் டிரஸ்கொதிக் 66 சதங்கள் மற்றும் 127 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 26,234 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும், 372 ஏ தர போட்டிகளில் 28 சதங்கள், 63 அரைச் சதங்களுடன் 12,299 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<