இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய A அணி

Sri Lanka tour of Bangladesh 2022

195

அவுஸ்திரேலியா A அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை A மற்றும் அவுஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான இந்த போட்டித்தொடர் ஒருநாள் போட்டிகளுடன் ஜூன் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், நான்கு நாட்கள் கொண்ட போட்டித்தொடர் ஜூன் 14 முதல் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளன.

>> பானுக்க ராஜபக்ஷ, மதீஷ பத்திரனவிற்கு இலங்கை அணியில் வாய்ப்பு

முதலில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், நான்கு நாட்கள் கொண்ட போட்டித்தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
ஜூன் 08 முதல் ஒருநாள் போட்டி எஸ்.எஸ்.சி
ஜூன் 10 2வது ஒருாள் போட்டி எஸ்.எஸ்.சி
ஜூன் 14 – 17 முதல் நான்கு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை
ஜூன் 21 – 24 2வது நான்கு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை

 

இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவானது, அவுஸ்திரேலியா A  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான 24 பேர்கொண்ட முதற்கட்ட குழாத்தை தெரிவுசெய்துள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த இந்த குழாத்தில் இலங்கையில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த தேசிய சுபர் லீக் மற்றும் மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான தொடர்களில் பிரகாசித்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை A முதற்கட்ட குழாம்

பபசர வதுகே, கமில் மிஷார, சங்கீத் குரே, மினோத் பானுக, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ, ஹஷான் துமிந்து, சமிந்த பெர்னாண்டோ, ஜனித் லியனகே, லஹிரு உதார, அஷேன் பண்டார, செஹான் ஆராச்சிகே, லஹிரு சமரகோன், லஹிரு மதுசங்க, தனன்ஜய ல்கஷான், பிரமோத் மதுஷான், டில்ஷான் மதுசங்க, ஷிரான் பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், கவிந்து பதிரண, பிரபாத் ஜயசூரிய, புலின தரங்க, லக்ஷித ரசன்ஜன

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<