மூன்றாவது டெஸ்டில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

120
First XI announced for 3rd Test - Sri Lanka vs England 2024

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>திட்டமிடல் நிலையத்தினை (Brain Center) வேறு இடத்திற்கு மாற்றிய இலங்கை கிரிக்கெட்<<

இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றிருக்க, மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் அரங்கில் ஆரம்பமாகுகின்றது. 

அந்தவகையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்க்கும் இலங்கை வீரர்கள் இப்போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகின்றனர் 

அதில் முதல் மாற்றமாக குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கவினை பிரதியீடு செய்கின்றார். இங்கிலாந்து தொடரில் நிஷான் மதுஷ்க எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத நிலையிலையே அவரின் பிரதியீடு இடம்பெறுகின்றது. 

மறுமுனையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதனால் சுழல்பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரியவிற்குப் பதிலாக விஷ்வ பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார். 

இலங்கை XI 

குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, பெதும் நிஸ்ஸங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<