பஞ்சாப் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் உபாதை காரணமாக IPL தொடரிலிருந்து விலகியுள்ளார் என அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கிளேன் மெக்ஸ்வெலின் வலதுகை விரல் ஒன்றில் உபாதை ஏற்பட்டுள்ளதாக அணியின் தலைவர் சிரேயோஸ் ஐயர் தெரிவித்திருந்தார்.
>>கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளின் ஒப்பந்தங்கள் நீக்கம்
குறித்த உபாதை தீவிரமடைந்ததன் காரணமாக கிளேன் மெக்ஸ்வெல் மிகுதி உள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளேன் மெக்ஸ்வெல் மாத்திரமின்றி அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பேர்கஸனும் உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்தார்.
எவ்வாறாயினும் இவர்கள் இருவருக்குமான மாற்று வீரர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<