இங்கிலாந்து அணிக்கு 10 விக்கட்டுகளால் சாதனை வெற்றி

402

இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி பர்மிங்ஹமில் உள்ள எஜ்பஸ்டனில் பகல்-இரவாக நேற்று நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை  எடுத்தது.

உபுல்தரங்கா 49 பந்துகளில் 53 ஓட்டங்களும், சன்டிமால் 52 ஓட்டங்களும், தலைவர் மேத்யூஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர். ப்ளங்கட், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டும், டேவிட் வில்லி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பட்லர், வோக்ஸ் போராட்டம்: போட்டி சமநிலையில் முடிவு

255 ஓட்ட இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி இந்த இலக்கை எடுத்து சாதனை படைத்தது. 34.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்தனர். அலெக்ஸ் ஹால்ஸ் 110 பந்துகளில் 133 ஓட்டங்களும் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்), ஜேசன் ராய் 95 பந்துகளில் 112 ஓட்டங்களும் (7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 236 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து முறியடித்துப் புதிய சாதனை படைத்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம்டையில் முடிந்தது. இரு அணிகள் மோதும் 3ஆவது ஒரு நாள் போட்டி பிரிஸ்டல் நகரில் நாளை நடக்கிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்