காலிறுதியில் இலங்கை எழுவர் ரக்பி அணி

27

சைனீஸ் தாய்பேய் அணியினருடன் கிடைத்திருக்கும் விறுவிறுப்பு வெற்றியுடன் ஆசிய எழுவர் ரக்பி தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளில் குழு A இல் மூன்றாம் இடத்தினை அடைந்துகொண்ட இலங்கை அணி, தொடரின் காலிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியுடன் மோதும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

இலங்கை எதிர் சைனீஸ் தாய்ப்பே

இலங்கை எழுவர் ரக்பி அணியின் சீனாவுடனான போட்டி சமநிலை அடைந்ததால்  இறுதி குழு நிலை ஆட்டமான இந்தப் போட்டியில் தமது குழுவில் (A) இலங்கை இரண்டாம் இடத்தினை பெற சைனீஸ் தாய்ப்பே அணியை பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் காணப்பட்டிருந்தது.

“ரக்பிக்குள் நுழைவோம்” செயற்திட்டம் இன்று பொலன்னறுவையிலிருந்து ஆரம்பம்

ரக்பி விளையாட்டினை இலங்கையில்…

போட்டியின் ஆரம்பத்திலேயே இலங்கை வீரர்கள் அதிக உத்வேகத்துடன் செயற்பட்டிருந்தனர். இரண்டாம் நிமிடத்தில் தனுஷ்க ரன்ஞன் இலங்கை அணிக்காக முதல் புள்ளியினைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் இதற்கு பதிலடியாக குயாங் போ பலவீனமான முறையில் செயற்பட்ட இலங்கை வீரர்களை ஊடுறுத்து சைனீஸ் தாய்ப்பே அணிக்காக புள்ளிகளைப் பெற்றார்.

போட்டியின் தொடர்ந்த நிமிடங்களில் சைனீஸ் தாய்ப்பே வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது. எனினும், எதிரணி வீரர்களை சமாளித்த ஜேசன் திஸ்ஸநாயக்க கன்வெர்சன் செய்யப்பட்ட ட்ரை ஒன்றின் மூலம் இலங்கையை முன்னிலைப்படுத்தினார். இந்த ட்ரை மூலம் இலங்கை வீரர்களால் நீண்ட நேரம் போட்டியின் ஆதிக்கத்தை தக்கவைக்க முடியவில்லை. போட்டியின் முதற்பாதி நிறைவுறும் தருணத்தில் சைனீஸ் தாய்ப்பே அணியும் செங் சியா மூலம் கன்வர்சன் செய்யபட்ட ட்ரை ஒன்றினால் புள்ளிகளை சமப்படுத்தியது.

முதல் பாதி: இலங்கை 12 – 12 சைனீஸ் தாய்ப்பேய்

இரண்டாம் பாதியில் தொடக்கத்தில் இலங்கை வீரர்கள் ரத்வத்த மூலம் கிடைக்கப்பெற்ற கன்வெர்சன் ட்ரையினால் ஆதிக்கத்தினை காட்டியிருந்தனர். எனினும் இதற்கு உடனடியான முறையில் ஹூனாக் டே லங் மூலம் சைனீஸ் தாய்ப்பே ரக்பி எழுவர் அணி பதில் தந்தது. இதனை அடுத்து கிடைத்த சில வாய்ப்புக்களையும் இலங்கை வீரர்கள் தவறவிட்டிருந்தனர்.

போட்டியின் இறுதி வினாடிகள் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் தரும் விதமாக காணப்பட்டது சிறினாத் சூரியபண்டார தனது தனிப்பட்ட ரீதியான முழுத் திறமையையும் வெளிக்காட்டியிருந்தார். இவரின் சிறப்பாட்டத்தோடு இலங்கை அணி போட்டியினை வெற்றிகொள்ளும் நிலையினை அடைந்தது.

இருந்தபோதிலும் சைனீஸ் தாய்ப்பே வீரர் சின் கேயு வைத்த ட்ரையினால் போட்டி சமநிலை அடையும் பரபரப்பான கட்டத்தினை எட்டியது. எனினும் வைக்கப்பட்ட ட்ரையினை சைனீஸ் தாய்ப்பே வீரர்கள் கன்வெர்சன் செய்ய தவறினர். இதனால் கிடைத்த அதிர்ஷ்டம் மூலம் போட்டியின் வெற்றியாளர்களாக இலங்கை எழுவர் ரக்பி அணி மாறியது.

முழு நேரம்: இலங்கை 26 – 24 சைனீஸ் தாய்ப்பே


இலங்கை எதிர் சீனா

இந்தப் போட்டியின் முதல் நிமிடங்களில் இரண்டு அணிகளும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. போட்டியின் முதல் ட்ரையினை இரண்டாவது நிமிடத்தில் தனுஷ்க ரஞ்சன் பெற்ற போதிலும் அதனை கன்வெர்சன் செய்ய தவறியிருந்தார். எனினும், மா சோங் இன் ட்ரை மூலம் சீன அணியினர் பதிலடி தந்தனர். அதோடு, அணியின் காஓ மூலம் பெற்ற ட்ரை மூலம் சீன அணியினர் மேலும் புள்ளிகளை விரைவாக பெற்றுக்கொண்டனர்.

மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு?

மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின்…

இன்னும் ட்ரை கோட்டின் மேலாக சென்ற சென் யங் இனாலும் சீன அணி மேலும் புள்ளிகளை அதிகரித்து முன்னிலை அடைந்து கொண்டது. எனினும் ஜேசன் திஸ்ஸநாயக்க எதிரணி பலவீனமாக காணப்பட்ட பகுதிகள் மூலம் முன்னேறி இலங்கை எழுவர் வீரர்களை போட்டியின் முதற்பாதியில் சீன அணியுடன் புள்ளிகளில் சமநிலை அடையச் செய்தார்.

முதற்பாதி: சீனா 12 – 12 இலங்கை

போட்டியின் இரண்டாம் பாதி சுவரஷ்யமான முறையில் அமைந்தது. இலங்கை சார்பாக ஜேசன் மீண்டும் கன்வெர்சன் செய்யப்பட்ட ட்ரை ஒன்றின் மூலம் புள்ளிகளை அதிகரித்தார். எனினும் இதற்கு சீன அணியும் கன்வெர்சன் ட்ரை மூலம் பதிலடி தந்தது. தொடர்ந்து மீண்டும் சிறினாத் சூரிய பண்டார மூலம் புள்ளிகளை அதிகரித்த இலங்கை சீன அணியுடன் சமநிலை அடைந்து  கொண்டது.

தொடர்ந்து சூரிய பண்டார மூலம் சிறப்பான ட்ரை ஒன்றினை இலங்கை வைத்தது. அதனை தனுஷ்க ரன்ஞன் கன்வெர்சன் செய்திருந்தார். மேலும் ட்ரை கோட்டை தாண்டியதன் மூலம் இன்னுமொரு வாய்ப்பையும் இலங்கை பெற்றுக்கொண்டது. அதனை ரஞ்சனால் மேலதிக புள்ளிகளாக மாற்ற முடியாது போனது. போட்டியின் இறுதி நொடிகளில் இலங்கை 7 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருப்பினும் சீனா தமது வீரர் ஹூ சென் பெற்றுக் கொண்ட ட்ரை கன்வெர்சன் செய்யப்பட போட்டி சமநிலை அடைந்தது.

முழு நேரம்: சீனா 26 – 26 இலங்கை


இலங்கை எதிர் ஜப்பான்

ஜப்பான் வீரர்கள் போட்டியின் தொடக்கத்தில் காட்டிய ஆதிக்கத்தினை எதிர்கொள்ள இலங்கை எழுவன் ரக்பி அணியின் வீரர்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

காயத்தில் இருந்து மீண்ட தனுஷ்க ரன்ஞனால் மாத்திரமே இலங்கை ரக்பி அணிக்காக (ஆசிய எழுவர் ரக்பி தொடரின்) முதற்கட்டப் போட்டிகளின் வெற்றியாளர்களான ஜப்பானுக்கு எதிராக ஒரு ட்ரையினை வைக்க முடிந்தது.

தொடர்ந்து ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஜப்பான் வீரர்கள் 14 நிமிடங்களுக்குள் ஏழு ட்ரைகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் ஆறு ட்ரைகள் கன்வெர்சன் செய்யப்பட்டது. இதன் மூலம் இறுதி வினாடிகளில் போட்டியின் வெற்றியார் ஜப்பான் என அறியப்பட்ட நிலையில் இலங்கை  தமது முயற்சிகளை கைவிட்டது. இதன் மூலம் போட்டியினை 47 புள்ளிகளுடன் ஜப்பான் தன்வசப்படுத்திக்கொண்டது.

இலங்கை 5 (1T) – 47 ஜப்பான்