உருகுவே – தென் கொரிய போட்டி கோலின்றி முடிவு

FIFA World cup 2022

42

உருகுவே மற்றும் தென் கொரிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண H குழு போட்டி கோலின்றி சமநிலையுற்றது. அதிக பரபரப்புடன் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் கடைசி வரை பந்து வலைக்குள் செல்லவில்லை.

டொஹாவின் கல்வி நகர அரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில தென் கொரியா ஆதிக்கம் செலுத்திய நிலையில் இரண்டாவது பாதியில் உருகுவேயின் ஆதிக்கம் அதிகரித்தது.

T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் சவால்

முதல் பாதியில் வைத்து ஹ்வாங் உய் ஜோ வலையை நோக்கி மின்னல் வேகத்தில் உதைத்த பந்து பட்டும் படாமலும் வெளியேறியதோடு உருகுவே அணித்தலைவர் டிகோ கோடின் கோனர் ஒன்றின்போது தலையால் முட்டி கோல்பெற முயன்றபோதும் அது நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறித்தது.

சமநிலையுற்ற போட்டியில் உருகுவே மற்றும் தென் கொரிய அணிகள் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. இந்த சமநிலையோடு H குழுவில் இருந்து 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புது திறந்து காணப்படுகிறது. குறிப்பாக உருகுவே, தென் கொரியா மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிறந்த நாட்டுக்கு எதிராக கோல் பெற்று சுவிஸை வெல்லச் செய்தார் எம்போலோ

ப்ரீல் எம்போலோ தான் பிறந்த கெமரூன் நாட்டுக்கு எதிராக கோல் புகுத்தி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்தை வெற்றிபெறச் செய்தார்.

கட்டாரின் அல் ஜனூப் அரங்கில் G குழுவுக்காக வியாழக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல்கள் பெற கடுமையாக போராடின. முதல் பாதியில் கோல் பெறப்படாத நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே எம்போலோ செயற்பட ஆரம்பித்தார்.

ஜெர்மனுக்கு ஜப்பானின் அதிர்ச்சி; கொஸ்டாரிகாவை துவம்சம் செய்த ஸ்பெயின்

48 ஆவது நிமிடத்தில் ஷெர்டான் ஷகிரி பரிமாற்றிய பந்தை பெற்ற எம்போலோ அதனை அதிரடியாக வலைக்குள் செலுத்தினார். எனினும் கோல் பெற்ற பின் அவர் தனது தாய்நாட்டுக்கு எதிரான அந்த கோலுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

ஆறு வயதில் கெமரூனில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் குடியெர்ந்த எம்போலோவுக்கு 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு பிரஜா உரிமை கிடைத்தது.

பிரேசில் இருக்கும் G குழுவில் 1-0 என சுவிட்சர்லாந்து பெற்ற வெற்றி ஆரம்ப சுற்றில் தீர்க்கமானதாக உள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<