பிரான்ஸுடனான காலிறுதிக்கு உருகுவே தகுதி

277

எடின்சன் கவானியின் இரட்டை கோல் மூலம் போர்த்துக்கல் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய உருகுவே அணி பிரான்ஸுடனான காலிறுதிப் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் உலக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி வெளியேறிய அதே தினத்திலேயே அவரது சிறந்த போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியாகும்போது 37 வயதை எட்டும் ரொனால்டோவுக்கு பெரும்பாலும் இது கடைசி உலகக் கிண்ணமாக அமைய வாய்ப்பு உள்ளது.

உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற 16 அணிகள்

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும்…

ரஷ்யாவின் சொச்சி நகரில் சனிக்கிழமை (30) நடைபெற்ற இரண்டாவது நொக் அவுட் போட்டியான போர்த்துக்கல்லுடனான ஆட்டத்தில் உருகுவே ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுத்தது.  

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் வைத்து கவானி மைதானத்தின் மறுபுறத்தில் இருக்கும் தனது சகாவான லுவிஸ் சுவாரெஸிடன் பந்தை பரிமாற்றியபோது அதனை பெற்ற அவர் சற்றுத்தூரம் கடத்திச் சென்று மீண்டும் கவானி இருக்கும் திசையை நோக்கி உயர அடித்தார். அப்போது அந்த பந்தை தலையால் முட்டி அபாரமாக கோலாக மாற்றினார் கவானி.

இதன்மூலம் 31 வயதான கவானி உருகுவே அணிக்காக உலகக் கிண்ணத்தில் கோல் பெற்ற வயதான வீரராக இடம்பெற்றார். 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக கோல் பெற்ற டியாகோ போர்லானை விடவும் கவானி 108 நாட்கள் மூப்பாக உள்ளார்.

எவ்வாறாயினும் முதல் பாதி ஆட்டத்தில் போர்த்துக் அணி பதில் கோல் பெற கடுமையாக போராடியது. குறிப்பாக போர்த்துக்கல் அணியை கடைசி 16 அணிகளுக்குள் அழைத்து வர நான்கு கோல்களை புகுத்திய ரொனால்டோ இந்தப் போட்டியில் குறிப்பிடும்படி சோபிக்கவில்லை.  

எதிரணி பெனால்டி எல்லைக்குள் பந்தை எடுத்துச் செல்வதில் தடுமாற்றம் கண்ட ரொனால்டோ ஒட்டு மொத்த போட்டியிலும் இரண்டாவது நிமிடத்தில் வைத்து மாத்திரமே நேராக கோலை நோக்கி உதைத்தார். எனினும் அதனை உருகுவே கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா தடுத்தார்.

முதல்பாதி ஆட்டம் முடியும்போது போர்த்துக்கல் அணி வசம் 60 சதவீத நேரம் பந்து இருந்ததோடு அந்த அணி 82 சதவீத நேரம் பந்தை பரிமாற்றியது. ஆனால் முதல் பாதியில் போர்த்தக்கல் அணியால் பதில் கோல் திருப்ப முடியாமல் போனது.

முதல் பாதி: உருகுவே 1 – 0 போர்த்துக்கல்

55ஆவது நிமிடத்தில் வைத்து போர்த்துக்கல் அணியின் ரபாயேல் குவரைரோ கோனர் திசையில் இருந்து அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றும் முயற்சியில் அந்த அணியினர் எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் துள்ளிக்குதித்தபோதும் அந்த பந்து பெபேயின் தலையில் பட்டே கோலாக மாறியது.

ரசிகர்களின் தனிப்பட்ட விமர்சனங்களால் ஈரான் கால்பந்து வீரர் சர்தார் ஓய்வு

ஈரானின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும்…

இதன்மூலம் போர்த்துக்கல் அணி 1-1 என போட்டியை சமனாக்கியதோடு உருகுவே அணி இம்முறை உலகக் கிண்ணத்தில முதல் முறை எதிரணிக்கு கோல் ஒன்றை விட்டுக்கொடுத்தது. அந்த அணி தனது மூன்று குழுநிலை போட்டிகளிலும் எதிரணிக்கு கோல் விட்டுக் கொடுக்காமலேயே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 35 வயதான பெபேவின் இந்த கோலானது உலகக் கிண்ணத்தில் போர்த்துக்கல் அணிக்காக அதிக வயது கொண்டவர் பெற்ற கோலாகவும் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் செயற்பட்ட எடின்சன் கவானி மற்றொரு கோலை பெற்று உருகுவே அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஏழு நிமிடங்கள் கழித்து ரொட்ரிகோ பென்டன்குர் கடத்திய பந்தை பெனால்டி எல்லையின் விளிம்பில் இருந்து உதைத்தபோதும் அது கோல்காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் வலைக்குள் புகுந்தது.

உருகுவே அணிக்கு வெற்றி தேடித்தந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழக வீரரான காவனி தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியது உருகுவே அணிக்கு காலிறுதிப் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் கடைசி நேரத்தில் பதில் கோல் ஒன்றை பெற போர்த்துக்கல் அவசரம் காட்டியபோது ரொனால்டோ நடுவருடன் வாக்குவாதப்பட்டு மஞ்சள் அட்டை பெற்றார். ஒருவேளை போர்த்துக்கல் காலிறுதிக்கு முன்னேறி இருந்தாலும் ரொனால்டோவால் அந்த போட்டியில் விளையாட முடியாத நிலையே ஏற்பட்டிருக்கும்.

பின்னர் போட்டி முடியும் கடைசி நேரத்தில் போர்த்துக்கல் அணிக்கு கோனர் கிக் ஒன்று கிடைத்தபோது அதனை எப்படியாவது கோல் ஒன்றாக மாற்றும் முயற்சியில் அந்த அணியின் கோல் காப்பாளரும் எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் அழைக்கப்பட்டார். எவ்வாறாயினும் போர்த்துக்கல் அணியால் கோல் பெற முடியாத நிலையில் இறுதி விசில் ஊதப்பட்டது.

பிரான்ஸிடம் ஆர்ஜன்டீனா வீழ்த்தப்பட்டபோது மெஸ்ஸி சோகத்தில் ஆழ்ந்தது போல் ரொனால்டோவும் உலகக் கிண்ணத்தில் இருந்து கவலையுடன் வெளியேறினார்.   

எவ்வாறாயினும் இந்த போட்டியில் ஆடியதன் மூலம் உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணம் இரண்டிலும் ஒட்டுமொத்தமாக 38 போட்டிகளில் ஆடிய ரொனால்டோ இந்த இரண்டு தொடர்களிலும் அதிக போட்டியில் ஆடியவராக இங்கிலாந்தின் ஸ்வைன்ஸ்டைகரின் சாதனையை சமன் செய்தார்.

ஐரோப்பிய சம்பியனான போர்த்துக்கல் கடந்த நான்கு உலகக் கிண்ண தொடர்களிலும் சரியாக நொக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்தே வெளியேறியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெறுமனே மூன்று மில்லியன் மக்கள் தொகை கொண்ட உருகுவே வரும் வெள்ளிக்கிழமை (6) நடைபெறவிருக்கும் பிரான்ஸுடனான காலிறுதிப் போட்டியில் ஆடவுள்ளது.

முழு நேரம்: உருகுவே 2 – 1 போர்த்துக்கல்

கோல் பெற்றவர்கள்

உருகுவே எடின்சன் கவானி 7′, 62′

போர்த்துக்கல் பெபே 55′


ம்பப்பேவின் இரட்டை கோல் மூலம் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி

19 வயதுடைய கைலியன் ம்பப்பேவின் (Kylian MBAPPE) இரட்டை கோல் மற்றும் பெனால்டி வாய்ப்பு மூலம் ஆர்ஜன்டீனாவுடனான நொக் அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை பெற்றது.

இதன் மூலம் பிரான்ஸ் இம்முறை பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் முதல் அணியாக காலிறுதிக்கு தகுதிபெற்றதோடு உலகக் கிண்ணம் முழுவதிலும் பெரும் போராட்டங்களோடு முன்னேறி வந்த லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி கடைசியாக வெளியேறியுள்ளது. 31 வயதுடைய மெஸ்ஸி தனது நான்கு உலகக் கிண்ண தொடர்களிலும் கிண்ணத்தை வெல்ல தவறிய நிலையில் அவரது கடைசி உலகக் கிண்ணமாக இது அமைய வாய்ப்பு உள்ளது.

உலகக் கிண்ண தொடரின் காலிறுதிக்கு முந்திய 16 அணிகள் சுற்று போட்டிகள் சனிக்கிழமை (30) ஆரம்பமான நிலையில் அதன் முதல் போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் பிரான்ஸ் அணிகள் கசான் அரங்கில் சந்தித்தன. எனினும் கடைசிவரை பரபரப்போடும் ஆக்ரோஷமாகவும் இடம்பெற்ற இந்த போட்டியில் மொத்தம் 7 கோல்களும், 8 மஞ்சள் அட்டைகளும் பதிவாகின.

போட்டி ஆரம்பித்து 9ஆவது நிமிடத்தில் அன்டோனியோ க்ரிஸ்மன் ப்ரீ கிக் மூலம் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது. தொடர்ந்து ம்பப்பே பந்தை எதிரணி கோல் எல்லையை நோக்கி கடத்திச் சென்றபோது மர்கோஸ் ரொஜோவினால் கீழே வீழ்த்தப்பட்டதால் பிரான்ஸுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. க்ரிஸ்மன் அதனை கோலாக மாற்றினார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 13 ஆவது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆர்ஜன்டீனா பதில் கோல் பெற கடுமையாக போராடியது. எனினும் அந்த அணியின் துருப்புச் சீட்டான மெஸ்ஸி போட்டியின் பெரும்பாலான நேரத்தில் எதிரணி கோல் கம்பத்திற்க மிகத் தொலைவில் நிலைகொண்டிருந்தார். இதனால் ஆர்ஜன்டீன அணி கோலை நோக்கி நெருங்குவது மிகக் கடினமாக இருந்தது.

முதல் சுற்றுடன் வெளியேறிய நடப்பு உலகக் கிண்ண சம்பியன்கள்

தானும் கெட்டு அடுத்தவனையும்…

முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் எவர் பெனெகா (Ever BANEGA) கடத்திய பந்தை 30 யார் தூரத்தில் இருந்து பெற்ற ஏஞ்சல் டி மரியா (Angel DI MARIA) அதனை மின்னல் வேகத்தில் உதைத்து கோலாக மாற்றினார்.

பிரான்ஸ் அணி இதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து கோல் ஒன்றை விட்டுக் கொடுத்தது 1986 இல் சோவியட் ஒன்றியத்திற்கு எதிரான போட்டியிலாகும். டி மரியா பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி: பிரான்ஸ் 1 – 1 ஆர்ஜன்டீனா  

ஆர்ஜன்டீன அணி ஆக்ரோஷத்துடன் பந்தை தன்னகத்தே வைத்திருந்தபோதும் இந்த போட்டியில் சிறந்த அணியாக களமிறங்கிய பிரான்ஸ் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்ஜன்டீன பின்கள வீரர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவில் ஹுகோ லொரிஸ் பரிமாற்றிய பந்தை மெஸ்ஸி நேராக கோலை நோக்கி உதைத்தபோதும் காப்ரியல் மெர்சடோ அதனை வலைக்குள் செலுத்தினார். இதன் மூலம் போட்டியில் ஆர்ஜன்டீனா 2-1 என முன்னிலை பெற்றபோது அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ஜன்டீன ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

போட்டியின் 57ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பதில் கோல் போட அந்த அணிக்கு சாதகமாக மாறியது. லூகாஸ் ஹெர்னான்டஸ் அடித்த பந்தை ஆர்ஜன்டீன பின்கள வீரர்களால் தடுக்க முடியாமல் அது நேராக பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்த பென்ஜமின் பவார்டிடம் சென்றபோது அவர் துள்ளி வந்த பந்தை நேராக வலைக்குள் செலுத்தி அபார கோல் ஒன்றை புகுத்தினார்.    

பிரேசில் நெருக்கடி இன்றி அடுத்த சுற்றில் : நொக் அவுட்டில் சுவீடனுடன் மோதும் சுவிட்சர்லாந்து

செர்பியாவுடனான தீர்க்கமான…

இந்நிலையில் செயற்பட்ட ம்பப்பே போட்டியை முழுமையா பிரான்ஸ் பக்கம் திசை திருப்பினார். 64 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையின் இடது பக்கம் இருந்து கோல் ஒன்றை போட்ட அவர் மூன்று நிமிடங்கள் கழித்து மற்றொரு கோலை பெற்று பிரான்ஸை 4-2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

போட்டி முடியும் கடைசி நேரத்தில் ஆர்ஜன்டீன அணி கடுமையாக போராடியது. அந்த அணி அடிக்கடி பிரான்ஸ் எல்லையை ஆக்கிரமித்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் போட்டியின் 93 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி சிறப்பான முறையில் பரிமாற்றிய பந்தை மாற்று வீரராக வந்த செர்கியோ அகுவேரோ தலையால் முட்டி கோலாக மாற்றியபோதும் அது ஆர்ஜன்டீன அணிக்கு கால தாமதமாக கிடைத்த கோலாகவே இருந்தது. அடுத்த மூன்று நிமிடத்தில் நடுவர் போட்டி முடிந்ததற்கான விசிலை ஊதியபோது பிரான்ஸ் பக்கம் இருந்து கொண்டாட்டங்கள் இடம்பெற மெஸ்ஸி அதிர்ச்சியில் பார்த்து நின்றார்.    

இதன்படி உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி நிஸ்னி நொவல்கிரோட்டில் நடைபெறவிருக்கும் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்காக உருகுவே அல்லது போர்த்துக்கல்லுடன் மோதவுள்ளது.

முழு நேரம்: பிரான்ஸ் 4 – 3 ஆர்ஜன்டீனா

கோல் பெற்றவர்கள்

பிரான்ஸ் – அன்டோனியோ க்ரிஸ்மன் 13′ (பெனால்டி), பென்ஜமின் பவார்ட் 57′, கைலியன் ம்பப்பே 64′, 68′

ஆர்ஜன்டீனா –  ஏஞ்சல் டி மரியா 41′, காப்ரியல் மெர்சடோ 48′, செர்கியோ அகுவேரோ 90’+3

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<