ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான அனைத்து தகுதியும் எனக்கு உண்டு: திமுத்

478
ICC

உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகத் தெரிவித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி நீண்டதொரு இன்னிங்ஸை விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளின் தலைவர்களும் லண்டனில் நேற்று ஒரே மேடையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார்கள்.

உலகக் கிண்ண விஷேட தூதுவராக மஹேல ஜயவர்தன

உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் ………..

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுத் கருணாரத்ன, நான் கடந்த காலங்களில் நிறைய டெஸ்ட் மற்றும் உள்ளூர் கழகமட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனவே, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாதது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” எனத் தெரிவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் நான் எவ்வாறு விளையாடுவது என்பது பற்றி தேர்வுக் குழுவினர் நன்கு அறிவார்கள். அதேபோல, ஒருநாள் போட்டிகளில் நீண்டதொரு இன்னிங்ஸை விளையாடுகின்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எமக்குத் தேவை. எனவே, அந்த திறமை என்னிடம் இருப்பதால் தேர்வாளர்கள் எனக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்என அவர் குறிப்பட்டார்.

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் எப்போதும் நல்ல மனஉறுதியுடன் விளையாட வேண்டும். எனவே, நாங்கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் மற்ற அணிகளைப் போல தன்னம்பிக்கையுடன் சிறந்த முறையில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதுதான் எமது இலக்காகும். ஆனால், அவ்வாறு வெற்றி பெறுவதென்பது எளிதான விடயமல்ல என்பதையும் நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம்”  என அவர் கூறினார்.

டெஸ்ட் வீரர்என்று முத்திரை குத்தப்பட்ட 31 வயதான திமுத் கருணாரத்ன 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

எனினும், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து விளையாடி வந்த திமுத், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டு இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் திமுத் கருணாரத்னவுக்கு தலைவர் பதவியை வழங்குவதற்கு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, கடந்த 18ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை வழிநடத்திய திமுத் கருணாரத்ன, குறித்த தொடரை 1-0 எனக் கைப்பற்றி இலங்கை அணியின் தொடர் ஒருநாள் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுஇவ்வாறிருக்க. இலங்கை அணியில் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இருப்பது திமுத் கருணாரத்னவுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய ஒத்துழைப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இலங்கை அணியின் பந்துவீச்சு குறித்து திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில்,

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை இளையோர் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் இளையோர் அணியுடனான ……..

இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் எமது வீரர்களுக்கு இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு போட்டியிலும் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப தன்னம்பிக்கையுடன் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், எமது பந்து வீச்சாளர்களின் மனநிலையைப் பராமரிக்க நான் கடினமாக உழைக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல. எனினும், எமது எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான மாற்று வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன் லசித் மாலிங்க இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.  

இம்முறை .பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்கவுக்கு, பத்து நாட்கள் ஓய்வளிக்க தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் அவருக்கு ஸ்கொட்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இலங்கை அணியுடன் இணைந்துகொள்ளவுள்ள மாலிங்க, அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<