முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் பெற்ற இந்திய வீரர்

57

இந்தியாவினைச் சேர்ந்த இடதுகை ஆரம்ப துடுப்பாட்டவீரரான டன்மாய் அகர்வால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக முச்சதம் (300) கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

BPL தொடரில் இருந்து விலகிய சொஹைப் மலிக்

கடந்த வெள்ளிக்கிழமை (26) ரஞ்சி கிண்ண முதல்தர தொடரின் குழுநிலை போட்டியொன்று ஹைதரபாதில் நடைபெற்றது. இப்போட்டியில் அருணாச்சல் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய நிலையில், ஹைதரபாத் அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக களமிறங்கிய டன்மாய் அகர்வால் தனது அணியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய போதே முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் விளாசி புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார். இந்த முச்சதத்திற்காக அகர்வால் வெறும் 147 பந்துகளை மாத்திரமே எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இதற்கு முன்னர் தென்னாபிரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்கோ மரைஸ் தென்னாபிரிக்க உள்ளூர் போட்டியொன்றில் கடந்த 2017ஆம் ஆண்டு 191 பந்துகளுக்கு முச்சதம் பெற்றதே முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான முச்சதமாக பார்க்கப்பட்டிருந்தது. இந்த சாதனையே டன்மாய் அகர்வால் தற்போது முறியடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ஐசிசியின் சிறந்த வீரராக மகுடம் சூடிய பெட் கம்மின்ஸ்!

அதேநேரம் இந்த முச்சத சாதனையை நிறைவு செய்ய 183 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட டன்மாய் அகர்வால் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த நேரத்தில் முச்சதம் பெற்ற வீரர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றார். இங்கிலாந்தின் முன்னாள் வீரரான டென்னிஸ் கொம்ப்டன் MCC அணிக்காக கடந்த 1948ஆம் ஆண்டு விளையாடிய போட்டியில் 181 நிமிடங்களில் முச்சதம் பெற்று குறைந்த நேரத்தில் முச்சதம் பெற்ற வீரராக இன்று வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இப்போட்டியில் தன்னுடைய இரட்டை சதத்தினைப் பூர்த்தி செய்ய 119 பந்துகளை எடுத்துக் கொண்ட அகர்வால், முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்கிற பெருமையினையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டார். முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் பெற்ற வீரராக ஆப்கானிஸ்தானின் சபீகுல்லாஹ் சின்வாரி காணப்படுகின்றார். இவர் தன்னுடைய இரட்டை சதத்திற்காக 89 பந்துகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இவை தவிர தனது துடுப்பாட்ட இன்னிங்ஸில் மொத்தமாக 26 சிக்ஸர்களை விளாசிய அகர்வால் முதல்தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராகவும் சாதனை புரிந்திருந்தார். டன்மாய் அகர்வாலின் அபார முச்சதத்தோடு அருணச்சால் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதரபாத் அணியானது இன்னிங்ஸ் மற்றும் 187 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

செய்தி மூலம் – Cricbuzz 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<