Home Tamil ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

336
SLC

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதன்மூலம் ஸ்டாலியன்ஸ் வீரர்கள் தொடரில் தமது முதல் தோல்வியை சந்தித்துள்ளனர். 

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் வெள்ளிக்கிழமை (4) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்ஸ் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தார். 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி

அதேநேரம், இப்போட்டியின் மூலம் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக அறிமுகம் பெற, கொழும்பு கிங்ஸ் அணி தமது அணிக்குள் முதல்முறையாக சுழல் பந்துவீச்சாளர் தரிந்து கௌஷாலினை உள்வாங்கியிருந்தது. 

கொழும்பு கிங்ஸ் – லோரி எவன்ஸ், தினேஷ் சந்திமால் (WK), அஷான் ப்ரியஞ்சன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (C), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹ்மட், துஷ்மந்த சமீர, டேனியல் பெல்-ட்ரம்மன்ட், தரிந்து கௌஷால்

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக (WK), ஜோன்சன் சார்ஸ், தனன்ஜய டி சில்வா, சொஹைப் மலிக், திசர பெரேரா (C), வனிந்து ஹசரங்க, சதுரங்க டி சில்வா, பினுர பெர்னாந்து, கைல் எப்போட், விஜயகாந்த் வியாஸ்காந்த் 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்தினைக் காட்டியது. ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக ஆரம்ப வீரராக களம் வந்த மேற்கிந்திய தீவுகளின் ஜோன்சன் சார்ள்ஸ் வெறும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில், தனது கடைசிப் போட்டியில் அரைச்சதம் பெற்ற ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து 26 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து மைதானத்தினை விட்டு வெளியேறினார். 

இயற்கையை முன்நிறுத்தி புதிய ஜேர்ஸியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்

இதன் பின்னர் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சொஹைப் மலிக், மினோத் பானுக்க, தனன்ஞய டி சில்வா மற்றும் அணித்தலைவர் திசர பெரேரா ஆகியோரும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய நிலையில் ஆட்டமிழந்தனர். இதனால், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது. 

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்கவின் உதவியுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சரிவில் இருந்து மீண்டு 20 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக சிறப்பாகச் செயற்பட்டிருந்த வனிந்து ஹஸரங்க 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக கைஸ் அஹ்மட் வெறும் 24 பந்துகளுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 149 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கும் சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. கொழும்பு கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்திருந்த லோரி ஈவான்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

ஆனால், பொறுப்புடன் செயற்பட்ட ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அன்ட்ரே ரசல் ஆகியோர் கொழும்பு கிங்ஸ் அணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்தினர். 

தொடர்ந்து இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு கொழும்பு கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது. 

கொழும்பு கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த தினேஷ் சந்திமால் தன்னுடைய 20ஆவது T20 அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதற்குள் 2 சிக்ஸர்களும் 7 பௌண்டரிகளும் அடங்கும். மறுமுனையில், அன்ட்ரே ரசல் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 20 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் அறிமுக வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதில் குறிப்பாக, 18 வயதுடைய விஜயகாந்த் வியாஸ்காந்த் அனுபவம் வாய்ந்த மெதிவ்ஸ், சந்திமால் மற்றும் அன்ட்ரே ரசல் ஆகியோருக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசியதுடன் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மெதிவ்சின் விக்கெட்டை தனது கன்னி LPL விக்கெட்டாக கைப்பற்றியிருந்தமை சிறப்பம்சமாகும். 

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இந்த லங்கா ப்ரீமியர் லீக்கில் இரண்டாவது முறையாக அரைச்சதம் பெற்றுக் கொண்ட தினேஷ் சந்திமால் பெற்றுக் கொண்டார். 

இப்போட்டியில் தோல்வியடைந்திருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு அது இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கிடைத்த முதல் தோல்வியாக அமைய, கொழும்பு கிங்ஸ் அணி தொடரில் தமது மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

அதேநேரம், இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் கொழும்பு கிங்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் சனிக்கிழமை (5) கண்டி டஸ்கர்ஸ் அணியினை எதிர்கொள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ் தமது அடுத்த மோதலில் தம்புள்ள வைகிங் அணியினை எதிர்வரும் திங்கட்கிழமை (7) சந்திக்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Colombo Stars
151/4 (19.2)

Jaffna Kings
148/9 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Laurie Evans b Qais Ahmed 26 23 1 2 113.04
Johnson Charles c Daniel Bell Drummond b Dushmantha Chameera 7 6 0 1 116.67
Minod Bhanuka c Daniel Bell Drummond b Qais Ahmed 21 24 2 0 87.50
Shoaib Malik b Qais Ahmed 8 5 1 0 160.00
Dhananjaya de Silva c Ashan Priyanjan b Tharindu Kaushal 2 4 0 0 50.00
Thisara Perera c Laurie Evans b Dushmantha Chameera 18 8 1 2 225.00
Wanindu Hasaranga b Angelo Mathews 41 23 7 1 178.26
Chathuranga de Sliva c Dinesh Chandimal b Andre Russell 0 3 0 0 0.00
Binura Fernando c Laurie Evans b Isuru Udana 11 17 1 0 64.71
Kyle Abbott not out 4 4 0 0 100.00
Vijayakanth Viyaskanth not out 3 4 0 0 75.00


Extras 7 (b 0 , lb 5 , nb 1, w 1, pen 0)
Total 148/9 (20 Overs, RR: 7.4)
Bowling O M R W Econ
Angelo Mathews 3 0 9 1 3.00
Dushmantha Chameera 4 0 27 2 6.75
Isuru Udana 4 0 50 1 12.50
Tharindu Kaushal 3 0 22 1 7.33
Qais Ahmed 3 0 24 3 8.00
Andre Russell 3 0 12 1 4.00


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal not out 68 51 7 2 133.33
Laurie Evans b Wanindu Hasaranga 14 10 1 1 140.00
Daniel Bell Drummond lbw b Wanindu Hasaranga 0 3 0 0 0.00
Angelo Mathews c Shoaib Malik b Vijayakanth Viyaskanth 22 24 2 1 91.67
Andre Russell c Avishka Fernando b Chathuranga de Sliva 32 20 2 3 160.00
Thikshila de silva not out 10 8 1 0 125.00


Extras 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0)
Total 151/4 (19.2 Overs, RR: 7.81)
Did not bat Isuru Udana, Ashan Priyanjan, Qais Ahmed, Dushmantha Chameera, Tharindu Kaushal,

Bowling O M R W Econ
Binura Fernando 4 0 41 0 10.25
Wanindu Hasaranga 4 0 23 2 5.75
Kyle Abbott 1 0 15 0 15.00
Thisara Perera 2 0 13 0 6.50
Vijayakanth Viyaskanth 4 0 29 1 7.25
Chathuranga de Sliva 4 0 21 1 5.25
Dhananjaya de Silva 0.2 0 0 0 0.00



முடிவு – கொழும்பு கிங்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<