இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியானது அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
குறித்த இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (20) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
>>ஆசியக்கிண்ணத்துக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
அதன்படி ஜனவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 22, 24 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனவரி 30ஆம் திகதி முதல் T20I ஆரம்பமாகவுள்ளதுடன், பெப்ரவரி 1 மற்றும் 3ஆம் திகதிகளில் கண்டி – பல்லேகரை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் – ஜனவரி 22
- 2வது ஒருநாள் – ஜனவரி 24
- 3வது ஒருநாள் – ஜனவரி 27
- முதல் T20I – ஜனவரி 30
- 2வது T20I – பெப்ரவரி 1
- 3வது T20I – பெப்ரவரி 3
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















