ஆசியக்கிண்ணத்துக்கான இந்திய குழாம் அறிவிப்பு!

Asia Cup 2025

39
Asia Cup 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசியக்கிண்ண ஆசியக்கிண்ண T20I தொடருக்கான இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட குழாத்தில் டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்ட சுப்மான் கில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவர் உப தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.

>>அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறும் றபாடா

இவர்களுடன் சஞ்சு சம்சன், அபிசேக் சர்மா, ஜித்தேஷ் சர்மா, திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சகலதுறை வீரர்களாக ஹர்திக் பாண்டியா, ஏற்கனவே T20I அணியின் உப தலைவராக செயற்பட்டிருந்த அக்ஷர் பட்டேல் மற்றும் சிவம் துபே ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சை பொருத்தவரை ஆசியக்கிண்ணத்தில் உடற்தகுதி காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுவந்த ஜஸ்ப்ரிட் பும்ரா இடம்பெற்றுள்ளார். இவருடன் அர்ஸ்டீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஆசியக்கிண்ணத் தொடருக்கான மேலதிக வீரர்களாக துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா, யசஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் வொசிங்டன் சுந்தர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

>>ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் பாபர், ரிஸ்வான் நீக்கம்

இந்த குழாத்தை பொருத்தவரை IPL தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைக்கப்படவில்லை என்பதுடன், யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கிண்ணத்துக்கான இந்திய குழாம்

 

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா. அர்ஸ்டீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் சர்மா, சிவம் துபே. அக்ஷர் பட்டேல். ஜித்தேஷ் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா, வரண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சம்சன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<