T20 போட்டிகளில் சென்னை சுபர் கிங்ஸ் புதிய மைல்கல்

983
Chennai Super Kings
BCCI

கோடை காலத்தில் கிரிக்கெட் இரசிகர்களின் உள்ளங்களை குளிர்விக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 தொடரின் பதினொராவது பருவகாலப் போட்டிகள் தற்போது மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகின்றன. இத்தொடரின் நேற்றைய (30) ஆட்டமொன்றில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினை  13 ஓட்டங்களால் வீழ்த்திய சென்னை சுபர் கிங்ஸ் அணி, அதன் மூலம் உள்ளூர் T20 போட்டிகள் வரலாற்றில் 100 வெற்றிகளை பதிவு செய்த இரண்டாவது அணியாக புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளது.

T-20 வருகையால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி என்கிறார் முரளிதரன்

உலகம் பூராகவும் T-20 போட்டிகள் பிரபல்யமடைவதற்கு முன் பந்து வீசுவது இலகுவாக இருந்ததாவும், தற்போது அந்த நிலை முற்றிலும் மாற்றமடை

உள்ளூர் T20 போட்டிகள் வரலாற்றில் முதலில் 100 வெற்றிகளை பதிவு செய்த அணியாக மூன்று தடவைகள் ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினர் முன்னதாக இந்த சாதனையில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். ரோஹித் சர்மாவினால் தற்போது வழிநடாத்தப்பட்டு வருகின்ற  மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரையில் 186 T20 போட்டிகளில் விளையாடி 104 வெற்றிகளையும் 79 தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியே உள்ளூர் T20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கிரிக்கெட் அணியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சுபர் கிங்ஸ் அணி 100ஆவது T20 வெற்றி மைல்கல்லினை எட்டியிருந்த போட்டி புனேயின் MCA மைதானத்தில் நேற்று (30) இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி ஷேன் வொட்சன் மற்றும் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி ஆகியோரின் அதிரடி அரைச்சதங்களுடன் 211 ஓட்டங்களினை குவித்திருந்தது.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர், தமிழக வீரர் விஜய் சங்கரின் சதத்துடன்  போட்டியில் வெற்றி பெற போராடியிருந்த போதிலும் இறுதியில் 13 ஓட்டங்களால் தோல்வியையே தழுவினர்.

தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர்

மும்பை இந்தியன்ஸ், சென்னை சுபர் கிங்ஸ் ஆகிய அணிகள் தவிர உள்ளூர் T20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த முதல் பத்து அணிகளுக்குள் ஒன்றாக ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் ஏனைய அணியான கொல்கத்தா நைட் ரைடரஸ் காணப்படுகின்றது.

உள்ளூர் T20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த ஏனைய முதல் பத்து அணிகளுக்குள் இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் கழகம், லங்கஷயர் கழகம்,  நொட்டிங்கம்ஷயர் கழகம், சர்ரேய் கழகம் மற்றும் எசெக்ஸ் கழகம் ஆகியவை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க