முதல் இன்னிங்ஸில் பலம் பெற ஆரம்பித்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி

405

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து லயன்ஸ் தமது துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பாட்டத்துடன் பலம் பெற ஆரம்பித்திருக்கின்றது.

ICC இன் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரையில் இரு இந்திய வீரர்கள்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை (07) மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடியிருந்த இலங்கை A அணி 190 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த லசித் குரூஸ்புள்ளே 122 ஓட்டங்களையும், நிப்புன் தனன்ஞய 14 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

புதன்கிழமை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு குறித்த நாளில் மேலதிகமாக 142 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து முதல் இன்னிங்ஸை 332 ஓட்டங்களுடன் நிறைவு செய்தது.

இலங்கை A அணி துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசியிருந்த லசித் குரூஸ்புள்ளே 130 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய அரைச்சதம் விளாசி 61 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் தவிர லக்ஷித மானசிங்க 43 ஓட்டங்கள் பெற்றும் லசித் எம்புல்தெனிய 42 ஓட்டங்கள் பெற்றும் தமது தரப்பினைப் பலப்படுத்தியிருந்தனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜோஸ் டொன்க்கு 5 விக்கெட்டுக்களையும், சேம் குக் மற்றும் மெதிவ் பிஸ்செர் ஆகியோர் தலா 2 விக்கெடடுக்கள் வீதமும் சுருட்டினர்.

மீண்டும் துடுப்பால் துவம்சம் செய்த குசல் மெண்டிஸ்

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்படுகின்றது.

எதிரணியினை விட 98 ஓட்டங்கள் மாத்திரம் பின்தங்கியுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த அலெக்ஸ் லீஸ் 82 பந்துகளை முகம் கொடுத்து 8 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் அரைச்சதம் பெற்ற மற்றைய வீரர்களில் ஒருவரான ஜோஸ் பொஹன்னன் 54 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் ஜேமி ஸ்மித் 86 ஓட்டங்களுடன் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடந்தால் சிறப்பாக இருக்கும் – அஸ்வின்

இலங்கை A அணி பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், சாமிக்க கருணாரட்ன ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் சுருக்கம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<