பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

174
England v Pakistan: 3rd Investec Test - Day Five

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் பர்மிங்ஹமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பாடப்பணித்தது. முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 297 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்கள் குவித்தது.

103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2ஆவது இனிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 125 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 414 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 82 ஓட்டங்களும், மொயீன் அலி 60 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நேற்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பேர்ஸ்டோவ் மேலும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோஹைல் கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இங்கிலாந்து அணி 445 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அந்த அணியின் தலைவர் அலைஸ்டர் குக் 2ஆவது இனிங்ஸை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். மொயீன் அலி 86 ஓட்டங்களுடனும், வோக்ஸ் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று இங்கிலாந்து 4 ஓவர்கள்தான துடுப்பாடியது. இங்கிலாந்து அணி 2 இனிங்ஸிலும் சேர்த்து பாகிஸ்தானை விட 342 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 343 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி 2ஆவது இனிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 70.5 ஓவர்களில் 201 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 141ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சமி அஸ்லாம் 70 ஓட்டங்களும், அசார் அலி 38 ஓட்டங்களும், சோகைல் கான் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் பின், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11ஆம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 297/10

கெரி பேலன்ஸ் 70, மொயின் அலி 63, எலாஸ்டயர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ 39

சுஹைல் கான் 96/5, ரஹத் அலி 83/2, முஹமத் அமீர் 53/2

பாகிஸ்தான் – 400/10

அசார் அலி 139, சமி அஸ்லம் 82, மிஸ்பா உல் ஹக் 56, சர்பிராஸ் அஹமத் 46*,

ஸ்டூவர்ட் ப்ரோட் 83/3, க்றிஸ் வோக்ஸ் 79/3, ஜேம்ஸ் எண்டர்சன் 54/2

இங்கிலாந்து – 445/6d

ஜொனி பெயர்ஸ்டோ  83, மொயீன் அலி  86*, எலஸ்டயர் குக்  66, எலெக்ஸ் ஹேல்ஸ் 54, ஜோ  ரூட் 62

யசீர் ஷா 172/2, முஹமத் ஆமிர் 75/2, சுஹைல் கான் 11/2

பாகிஸ்தான் – 201/10

சமி அஸ்லம் 70, சுஹைல் கான் 36, அசார் அலி 38

ஸ்டூவர்ட் ப்ரோட் 24/2, க்றிஸ் வோக்ஸ் 53/2, ஜேம்ஸ் எண்டர்சன் 31/2, மொயீன் அலி 49/2

இங்கிலாந்து அணி 141 ஓட்டங்களால் வெற்றி