எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொரோனா பரிசோதனை

75

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்கின்ற மையமாக வழங்குவதற்கு வார்விக்ஷெயர் (Warwickshire) கவுன்ட்டி கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை இங்கிலாந்தில் 34 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 2921 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இணையும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீர, வீராங்கனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குமான தங்களது…

இங்கிலாந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதமாக எடுக்காததால்தான் தொற்று அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது

அதேவேளையில் ஒரு நாளைக்கு அங்கு 13 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவு எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதனால் இந்த மாதம் இறுதிக்குள் தினந்தோறும் ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் வகையில் மையங்கள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்கள் பயன்படுத்தும் பொதுவான இடங்களை தற்காலிய மருத்துவமனையாக மாற்ற இங்கிலாந்து அரசு தீவிரம் காட்டி வருகிறது

இதேநேரம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறுகின்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதனால் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு 2,823 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்நாட்டு கிரிக்கெட் சபை அரசாங்கத்துக்கு பலவகையில் உதவி செய்து வருகிறது.

இந்நிலையில்தான் இங்கிலாந்தின் பிரசித்த பெற்ற கிரிக்கெட் மைதானமான எட்ஜ்பாஸ்டனை நிர்வகித்து வரும் வார்விக்ஷெயர் கவுன்ட்டி கழகம், அந்த மைதானத்தில் உள்ள வாகனங்களை நிறுத்தும் தரிப்பிடத்தை கொரோனா வைரஸ் பரிசோதனை மையமான மாற்றுவதற்கு முன்வந்துள்ளது

இதுதொடர்பில் அந்த கழகத்தின் நீல் ஸ்னோபோல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய கவுன்ட்டி கிரிக்கெட், ஆலோசனைக் கூட்டங்கள், வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள

இந்த மோசமான நிலையில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்

75 வருடங்களின் பின் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இரத்து

புல்தரை மைதானத்தில் நடைபெறும் வருடத்தின் மிகப்…

எனவே கழக உறுப்பினர்கள், முன்னாள் வீரர்கள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய ஒரு சிறிய பங்களிப்பை செய்ய இருக்கிறோம். எங்களது மைதானம் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவ முடியும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்தார்

பர்மிங்ஹமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானாத்தில் இறுதியாக கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி நடைபெற்றதுடன், அதன்பிறகு இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக, கொரோனா வைரஸுக்காக மருத்துவமனைக்கு வருகின்ற பணியாளர்களின் கார்களை நிறுத்திவைக்க லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தின் வாகனத் தரிப்பிடத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<