பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுக ராஜபக்ஷ

IPL Auction 2022

395
Bhanuka Rajapaksa

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷவை, பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

IPL ஏலத்தின் முதல் வாசிப்பின் போது, பானுக ராஜபக்ஷவை எந்த அணிகளும் வாங்க முன்வராத நிலையில், அவரின் பெயர் மீண்டும் ஏலத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

>> மஹீஷ் தீக்ஷனவை வாங்கிய சென்னை ; லக்னோ அணியில் சமீர!

இந்த நிலையில் பானுக ராஜபக்ஷவின் நிர்ணயத்தொகையான 50 லட்சம் ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. அதன்படி, இலங்கை அணிசார்பாக ஏலத்தில் வாங்கப்பட்ட ஐந்தாவது வீரராக பானுக ராஜபக்ஷ பதிவாகியுள்ளார்.

நேற்றைய தினம் ஏலத்தில் வனிந்து ஹஸரங்கவை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருந்த நிலையில், இன்றைய தினம் துஷ்மந்த சமீரவை லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியும், மஹீஷ் தீக்ஷனவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாமிக்க கருணாரத்னவையும் வாங்கியிருந்தன.

அதன்படி, இம்முறை நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ஏலத்தில் இலங்கை அணியைச்சேர்ந்த 5 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இதில், பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் முதன்முறையாக ஐ.பி.எல். அணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<