நான்காவது சர்வதேச லீக் T20 (ILT20) தொடரின் போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டிசம்பர் 02ஆம் திகதி முதல் ஜனவரி 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ள
இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் டுபாய் கேபிட்டல்ஸ் அணி, டெசர்ட் வைப்பர்ஸ் அணியை சந்திக்கிறது. கடந்த பருவத்தின் மறக்கமுடியாத இறுதிப் போட்டியின் மறுசந்திப்பாக இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக நடைபெற்ற 3 பருவங்களுக்குமான ILTடி20 தொடர் ஜனவரி – பெப்ரவரி மாதங்களில் தான் நடைபெற்றது. எனினும், 2026 T20 உலகக் கிண்ணத் தொடர் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இலங்கை – இந்தியாவில் கூட்டாக நடைபெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான ILT20 தொடரை டிசம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆறு அணிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெறும். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 15 போட்டிகளும், அபுதாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 11 போட்டிகளும், ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது.
- 2026ஆம் ஆண்டுக்கான ILT20 போட்டித் தொடரின் திகதிகளில் மாற்றம்
- ILT20 தொடரில் களமிறங்கும் எட்டு இலங்கை வீரர்கள்
30 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் முதல் சுற்றில் இரண்டு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நான்காவது சர்வதேச லீக் T20 தொடரின் பிளே–ஓஃப் சுற்றுக்கு முன்னேறும். இதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், டிசம்பர் 30ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள முதலாவது குவாலிஃபையரில் சந்திக்கும்.
அதனைத் தொடர்ந்து எலிமினேட்டர் போட்டி ஜனவரி முதலாம் திகதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும். இறுதிப் போட்டி ஜனவரி 4ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<