தென்னாபிரிக்க அணியிலிருந்து விலகுவதாக ஒலிவியர் திடீர் அறிவிப்பு

1279
 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவேன் ஒலிவியர், தேசிய அணியிலிருந்து விலகி கொல்பாக் ஒப்பந்தத்தின் (Kolpak Deal) அடிப்படையில், மூன்று வருடங்களுக்கு இங்கிலாந்தின் உள்ளூர் (கௌண்டி) கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹஷிம் அம்லா நீக்கம்

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள….

தனிப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு இங்கிலாந்தின் உள்ளூர் அணியான யோர்க்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ள இவர், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் உள்நாட்டு வீரர் என்ற அடிப்படையில் உள்ளூர் கௌண்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் மற்றும் பணத் தேவையை கருத்திற்கொண்ட வீரர்கள் கொல்பாக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதனை வழமையாக கொண்டுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு முதல் தற்போதுவரை தென்னாபிரிக்க அணியின் 42 வீரர்கள் கொல்பாக் ஒப்பந்தத்தின் மூலமாக கௌண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ள டுவேன் ஒலிவியரின் இந்த திடீர் முடிவு இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்பாக் ஒப்பந்தத்தின் மூலம் கௌண்டியில் விளையாடும் வீரர்கள் ஒப்பந்தக் காலத்தில் தங்களுடைய சொந்த நாட்டுக்காக விளையாட முடியாது. அத்துடன், இங்கிலாந்தின் உள்நாட்டு வீரர் என்ற அடிப்படையிலேயே போட்டிகளில் பங்கேற்க முடியும். உலகக் கிண்ண தொடர் நெருங்கி வருகின்ற நிலையில், ஒலிவியரின் இந்த முடிவு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Album :Sri Lanka vs South Africa 2nd Test 2019 | Day 3

டுவேன் ஒலிவியர் இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 24 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாக தெரிவாகியிருந்தார். அத்துடன், இறுதியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதல் 20 வீரர்களுக்குள் (19) இடம்பிடித்துள்ளார். இத்தகைய முன்னேற்றங்களை அடைந்து வரும் இவரின் இந்த முடிவு பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

கொல்பாக் ஒப்பந்தம் மூலமாக கௌண்டியில் விளையாடவுள்ளமை குறித்து இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டுவேன் ஒலிவீர், “எனது வாழ்வின் மிகக் கடினமான அறிவிப்பொன்றை இன்று வெளியிடுகிறேன். நான், உள்நாட்டு வீரர் என்ற அடிப்படையில் மூன்று வருட ஒப்பந்தத்தின் மூலமாக யோர்க்ஷையர் அணிக்காக விளையாடவுள்ளேன்”

எனது இந்த முடிவு சிலருக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கலாம். தொழில்முறை கிரிக்கெட் வீரராக குறுகிய காலத்திற்கு மாத்திரமே இருக்க முடியும். அதில் கிடைக்கும் வாய்ப்புகளை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். அதுவும், எனக்கு இருந்த அனைத்து வழிகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த முடிவினை எடுத்துள்ளேன்.

T20 பிளாஸ்ட் தொடரில் விளையாடவுள்ள டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் ….

பாகிஸ்தான் தொடருக்கு முன்னர் நான் 2017ம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாத்திரமே விளையாடியிருந்தேன். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதன் விளைவாக நான் வேறு வழிகளை தேடிக்கொண்டிருந்தேன். இவ்வாறான தருணத்தில் தான் குறிப்பிட்ட வாய்ப்பு கிடைத்தது” என பதிவிட்டுள்ளார்.

டுவேன் ஒலிவியர் கடந்த 2017ம் ஆண்டு ஜொஹன்னெஸ்பேர்க்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். இதன் பின்னர் தென்னாபிரிக்க அணிக்காக மொத்தமாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 20 இன்னிங்ஸ்களில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<