T20 பிளாஸ்ட் தொடரில் விளையாடவுள்ள டி வில்லியர்ஸ்

470

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஏபி. டி வில்லியர்ஸ், இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில், மிட்ல்செக்ஸ் கௌண்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹஷிம் அம்லா நீக்கம்

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான….

தென்னாபிரிக்க அணிக்காக 13 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வில்லியர்ஸ் 20,014 ஓட்டங்களை குவித்துள்ளார். இவர், கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததுடன், உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் T20 தொடர்களில் தொடர்ந்தும் விளையாடவதாக அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், தற்போது இங்கிலாந்தின் கௌண்டி கிரிக்கெட் தொடரான T20 பிளாஸ்டில், மிட்ல்செக்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடுவதற்கு வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள முதல் ஏழு போட்டிகளில் விளையாடவுள்ள இவர், மிட்ல்செக்ஸ் அணி நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறுமாயின், குறிப்பிட்ட போட்டிகளிலும் விளையாடுவார் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மிட்ல்செக்ஸ் அணி கடந்த பருவால போட்டித் தொடரில், 14 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் இறுதி இடத்தை பிடித்திருந்தது. தற்போது, அந்த அணியில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதிய பயிற்றுவிப்பாளராக பணியேற்றுள்ள ஸ்டுவர்ட் லோவ் சிறந்த வீரர்களை அணிக்குள் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி முதலில், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மானை அணிக்கு ஒப்பந்தம் செய்திருந்த இவர், தற்போது வில்லியர்ஸை அணிக்குள் அழைத்து வந்துள்ளார்.

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையே இன்று ….

இதேவேளை, மிட்ல்செக்ஸ் அணியில் இணையவுள்ளமை தொடர்பில் வில்லியர்ஸ் கருத்து வெளியிடுகையில்,“ நான் எப்போதும் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என நினைப்பேன். தற்போது லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த மைதானத்தில் விளையாடுவது பெருமைக்குறிய விடயமாகும். ரிச்மண்ட்டில் விளையாட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். தெற்கு லண்டனின் மிக அழகான மைதானம் என்பதுடன், குறித்த அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

வில்லியர்ஸ் தொடர்பில் மிட்ல்செக்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டுவர்ட் லோவ் குறிப்பிடுகையில், “உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வில்லியர்ஸுடன் இணைந்து, இளம் வீரர்கள் விளையாடும் போது, அவர்கள் அதிக விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதேநேரம், நவீன துடுப்பாட்ட யுத்திகளை பயன்படுத்தும் ஒரு வீரருடன் இணைந்து செயற்படவுள்ளமை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<