பேல்ஸ் – த்ரீ ஸ்டார் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

207

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து நடாத்தி வரும் ட்ரகன்ஸ் லீக் -2017′ சுற்றுப் போட்டிகளின் 23வது லீக் ஆட்டமாக இடம்பெற்ற புத்தளம் த்ரீ ஸ்டார் மற்றும் கல்பிடி பேல்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுபெற்றது.

சம தரத்தினைக் கொட்ட இரு கழகங்களுக்கும் இடையிலான இந்த ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இரண்டாம் பாதியில் போராடி வென்றது ட்ரிபல் செவன் அணி

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு ..

போட்டி ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் இரு அணிகளும் மிகவும் உத்வேகத்துடன் பந்துப் பரிமாற்றத்தில் ஈடுபடத் தொடங்கினர். எனினும் த்ரீ ஸ்டார் வீரர்கள் சற்று வேகமாக ஆட ஆரம்பித்தனர்.

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் வீரர் றினூஸ் கொடுத்த பந்தினை அப்துல்லாஹ் சற்று வேகமாக கம்பம் நோக்கி அடிக்க, அதை எதிரணி கோல் காப்பாளர் றிபாய் இலகுவாக பிடித்துக்கொள்ள முதல் முயற்சி வீணானது.

மேலும் 3 நிமிடங்களில் பேல்ஸ் அணியின் சப்னி மொஹம்மட் தடுப்பு வீரர்கள் மூவரைக் கடந்து கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.

தொடர்ந்த ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் சல்மான் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை அப்துல்லாஹ் தலையால் முட்டி கம்பம் திருப்பினார். எனினும், பந்து கம்பத்தில் பட்டவாரே மைதானத்திலிருந்து வெளியேற த்ரீ ஸ்டாரின் மற்றொரு கோல் வாய்ப்பு தகர்ந்து போனது.

மீண்டும் 22வது நிமிடத்தில் அஹ்ஸான் கொடுத்த பந்தினை சல்மான் கம்பத்திற்குள் உதைந்து கோலாக்கினார். எனினும், நடுவர் ஓப் சைட் என அறிவிக்க அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் அல்தாப் கொடுத்த பந்தினை ஸியான் கம்பம் நோக்கி உதைக்க பந்தை நிப்ராஸ் சுலபமாக பற்றிக்கொண்டார்.

ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் வீரர் சல்மான் நேர்தியான பந்துப் பரிமாற்றம் ஒன்றினை அஹ்ஸானிடம் கொடுக்க, அஹ்ஸான் அதனை கோல் காப்பாளர் இல்லாத திசையினால் கோலுக்குள் செலுத்தினார். இதனால், கோல் கணக்கினை ஆரம்பித்து முன்னிலை பெற்றது த்ரீ ஸ்டார் கழகம்.

மீண்டும் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் றினூஸ், சல்மானிடம் பந்தினைப் பரிமாற்ற, சல்மான் இரண்டு தடுப்பு வீரர்களை தாண்டி அஹ்ஸானிடம் பந்தைக் கொடுத்தார். எனினும், இலகுவான கோல் அடிக்கும் வாய்ப்பினை அஹ்ஸான் வீணடிக்க அடுத்த வாய்ப்பும் கைநழுவிப் போனது.    

போட்டியின் இரு பாதி ஆட்டமும் தலா 40 நிமிடங்களுக்கு மட்டுப்டுத்தப்பட்டிருந்தன.

முதல் பாதி: த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0  பேல்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆட்டத்தினை இரு அணி வீரர்களும் சுறுசுறுப்போடு ஆரம்பித்தனர். எனினும், பேல்ஸ் அணி போட்டியில் மீண்டு முன்னிலை பெற அதிகம் போராட வேண்டியிருந்தது.

ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது (43) நிமிடத்தில் த்ரீ ஸ்டார் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பேல்ஸ் வீரர் ரினூஸான் உயர்த்தி அடித்த பந்தினை எதிரணியின் கோல் காப்பாளர் நிப்ராஸ் கையிலிருந்து நலுவ விட அதை அஸ்பாக் மீண்டும் கம்பம் நோக்கி அடித்தார். பந்து கம்பத்தினுள் சென்ற வேலையில் சல்மான் அதனை கையால் தட்டி விட நடுவர் சல்மானுக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்து, பேல்ஸ் அணிக்கு பெனால்ட்டி உதையினை வழங்கி வைத்தார்.

பெனால்ட்டி உதையினை அஸ்பாக் பொறுப்பேற்று இடக் காலால் அடிக்க, நிப்ராஸ் பிடிக்க முனைவதற்குள் பந்து கம்பம் புகுந்தது. எனவே 1 – 1 என கோல் கணக்கு சமனடைந்தது.

மேலும், ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கோல் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து சப்னி மொஹம்மட் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க, பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.  

இரு அணிகளும் முழு மைதானப் பரப்பையும் பயன்படுத்தி வெற்றிக்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டனர்.

போட்டியின் 74ஆவது நிமிடத்தில் அப்தால் வேகமாக செயற்பட்டு நீண்ட தூரத்திலிருந்து பந்தினை கொண்டு வந்து கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்திற்கு வெளியே சென்றதால் மிகச் சிறப்பான முயற்சி த்ரீ ஸ்டார் அணிக்கு வெற்றியளிக்கவில்லை.

மேலும், 79வது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை நபாஸ் உயர்த்தி கம்பம் நோக்கி அடிக்க சிறப்பாகச் செயற்பட்ட றிபாஸ் உயரே எழுந்து கையால் குத்திவிட போட்டியின் இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

நியு ஸ்டாரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது விம்பில்டன்

புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற…

ஆட்டம் நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க சம தரத்தினை கொண்ட இரு அணிகளும் வெற்றிக்காக கடின முயற்சியில் தோற்றுப் போக 1 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நிறைவுபெற்றது. எனவே, இரு கழகங்களுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.

முழு நேரம்: த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 1 பேல்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்
பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – அஸ்பாக் 43’
த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அஹ்ஸன் 37’

மஞ்சள் அட்டை
பேல்ஸ் விளையாட்டுக் கழகம் – றில்வான் 29’
த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – சல்மான் 43’