அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக்!

India Cricket

155

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினேஷ் கார்த்திக் இறுதியாக IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். 

பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராக மாறும் நவீட் நவாஸ்

அதேநேரம் இறுதியாக தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக, 2022ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். 

இவ்வாறான நிலையில் IPL தொடரின் எலிமினேட்டர் போட்டியின் போது, இவர் IPL தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியாகியதுடன், மைதானத்தில் வைத்து வீரர்களும் இவருக்கு மரியாதைகளை வழங்கியிருந்தனர். 

குறித்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய ஓய்வு தொடர்பான அறிவிப்பை தினேஷ் கார்த்திக் வெளியிடாத போதும், தற்போது அனைத்துவகை போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 T20I போட்டிகளில் விளையாடி 3463 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<