இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான தினேஷ் சந்திமால் நேபாளத்தில் இடம்பெறவுள்ள எவரஸ்ட் பிரீமியர் லீக் T20 தொடரில் விளையாடவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அழைப்பு T20 தொடரிலிருந்து விலகும் வீரர்கள் விபரம் அறிவிப்பு
அந்தவகையில் இலங்கையின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான புபுது தசநாயக்க பயிற்றுவிக்கும் பைரகவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவே, 31 வயது நிரம்பிய தினேஷ் சந்திமால் ஆடவுள்ளார்
முன்னதாக இந்திய பிரீமியர் லீக் தொடர், கனடாவின் குளோபல் T20 லீக் என்பவற்றில் விளையாடியிருக்கும் தினேஷ் சந்திமால், மூன்றாவதாக விளையாடும் வெளிநாட்டு T20 தொடராக எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடர் அமைகின்றது.
ஆப்கானிஸ்தான் அணியுடன் இணையும் ஷோன் டைட்
அதேநேரம், இலங்கை அணிக்காக 62 டெஸ்ட், 149 ஒருநாள் போட்டிகள் மற்றும் 57 T20 சர்வதேச போட்டிகள் என்பவற்றில் விளையாடி மிகச் சிறந்த அனுபவத்தினை தன்னகத்தே கொண்டிருக்கும் தினேஷ் சந்திமால், அதன் மூலம் எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் தான் விளையாடவுள்ள அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம், ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…