டயலொக் கழக றக்பி லீக்கில் CH&FC அணிக்கு முதல் வெற்றி

93

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (25) நிறைவுக்கு வந்துள்ளன.

மூன்றாவது வார போட்டிகளின் நிறைவின் படி கண்டி விளையாட்டு கழகம், ஹெவ்லொக் விளையாட்டு கழகம் மற்றும் CR&FC ஆகிய அணிகள் தங்களுடைய மூன்றாவது வெற்றிகளை பதிவுசெய்துள்ளதுடன், CH&FC அணி இந்த பருவகாலத்தில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

டயலொக் றக்பி லீக்கில் CR&FC, கண்டி, ஹெவ்லொக் கழகங்களுக்கு 2ஆவது தொடர் வெற்றி

முதற்தர கழக ரக்பி அணிகளுக்கு …

ஹெவ்லொக் விளையாட்டு கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்

கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் கடந்த 23ம் திகதி நடைபெற்ற கடற்படை அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஹெவ்லொக் அணி சிறந்த ஆரம்பத்தினை பெற்றிருந்தது. முதற்பாதி நிறைவில் 12-6 என்ற 6 புள்ளிகள் முன்னிலையை ஹெவ்லொக் அணி பெற்றிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஆதிக்கத்தை செலுத்திய ஹெவ்லொக் அணி மீண்டும் முன்னேற்றத்தைக் கண்டு 19-6 என 13 புள்ளிகள் முன்னிலையை பெற்றுக்கொண்டது. எனினும், பின்னர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய கடற்படை அணி இரண்டு ட்ரைகள் மற்றும் ஒரு கன்வேர்சன் ஊடாக 18 புள்ளிகளை பெற, போட்டி 18-19 என விறுவிறுப்பாகியது.

எனினும் இறுதியாக ஹெவ்லொக் அணிக்கு 22 மீற்றர் தூரத்திலிருந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய பிரின்ஸ் சாமர மூன்று புள்ளிகளை பெற்றுக்கொடுக்க, ஹெவ்லொக் அணி 22-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

முழுநேரம்ஹெவ்லொக் அணி 22 – 18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

 

பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் CR&FC

கொழும்பு பொலிஸ் விளையாட்டு கழக அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் (24) CR&FC அணி 38-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி, தொடர்ச்சியாக தங்களது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது.

இந்தப் போட்டியின் முதற்பாதியில் நான்கு ட்ரைகள் மற்றும் மூன்று கன்வேர்சன்களை தம்வசப்படுத்திய CR&FC அணி 26-17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியிலும் CR&FC அணி மேலதிக இரண்டு ட்ரைகளை வைத்து 28 புள்ளிகளை பெற்றதுடன், பொலிஸ் விளையாட்டு கழகம் எவ்வித புள்ளிகளையும் பெறாத நிலையில், CR&FC அணி 38-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

முழுநேரம்CR&FC அணி 38-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி விளையாட்டு கழகம்

இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற இராணுவப்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் கண்டி விளையாட்டு கழகம் 38-10 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

போட்டியின் முதல் பாதியில் 2 ட்ரைகள் மற்றும் 2 கன்வேர்சன்கள் ஊடாக 12 புள்ளிகளை பெற்ற கண்டி விளையாட்டுக் கழக அணி 14-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது பாதியில் இராணுவப்படை அணி ஒரு ட்ரையை மாத்திரம் வைத்து 10 புள்ளிகளை பெற, கண்டி விளையாட்டுக் கழக அணி இரண்டாவது பாதியில் மேலதிகமாக 3 ட்ரைகள், 3 கன்வேர்சன்கள் மற்றும் ஒரு ட்ரொப் கோலின் உதவியுடன் 24 புள்ளிகளை பெற்று, 38-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

முழுநேரம்கண்டி விளையாட்டு கழக அணி 38-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் CH&FC

டயலொக் கழக றக்பி லீக் தொடரின் இந்த பருவாகலத்துக்கான முதல் வெற்றியினை CH&FC கழக அணி நேற்றைய தினம் குதிரைப்பந்தய திடல் விளையாட்டு அரங்கில் வைத்து பெற்றுக்கொண்டது.

விமானப்படை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் CH&FC அணி 26 -18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டியின் முதல் பாதியில் மூன்று ட்ரைகளுடன் 15 புள்ளிகளை பெற்ற CH&FC அணி, 15-8 என்ற முன்னிலையைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் CH&FC அணி மற்றுமொரு ட்ரையை வைத்ததுடன், இரண்டு பெனால்டி உதைகளின் உதவியுடன் 26 புள்ளிகளை பெற, விமானப்படை அணி மொத்தமாக 2 ட்ரைகள், ஒரு கன்வேர்சன் மற்றும் இரண்டு பெனால்டி வாய்ப்புகளின் உதவியுடன் 18 புள்ளிகளை பெற்று தோல்வியடைந்தது.

முழுநேரம்CH&FC  அணி 26-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி