இன்னிங்ஸ் வெற்றியோடு புது வருடத்தை ஆரம்பித்த அக்குறனை அஸ்ஹர் கல்லூரி

692

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்று வருகின்ற 19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு III (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், குருநாகல் வயம்ப றோயல் கல்லூரியினை இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கும் அக்குறனை அஸ்ஹர் கல்லூரி மலர்ந்திருக்கும் புதிய வருடத்தினை அபார வெற்றியொன்றுடன்  ஆரம்பித்திருக்கின்றது.

இலங்கை A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்

சுற்றுலா அயர்லாந்து A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையே

அக்குறனை அஸ்ஹர் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (31) தொடங்கியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற வயம்ப றோயல் அணியினர் மைதானச் சொந்தக்காரர்களான அஸ்ஹர் வீரர்களை முதலில் துடுப்பாடுமாறு பணித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய அஸ்ஹர் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 281 ஓட்டங்களை குவித்தது.

அஸ்ஹர் அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் அர்ஹாம் அரைச்சதம் தாண்டிய நிலையில் 82 ஓட்டங்கள் பெற, மொஹமட் சஹீமும் அரைச்சதம் தாண்டி 68 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பினை வலுப்படுத்தியிருந்தார்.

இதேநேரம், வயம்ப றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக பஹான் பண்டார 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற, பெதும் அதிகாரிநாயக்க மற்றும் சித்தார தேஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

முக்கிய வீரர்களின் பிரகாசிப்புடன் முடிவடைந்த டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய வயம்ப றோயல் கல்லூரி அணி அஸ்ஹர் கல்லூரி பந்துவீச்சாளர் மொஹமட் யூசுபின் அதிரடி பந்துவீச்சு காரணமாக வெறும் 99 ஓட்டங்களுடன் சுருண்டது.

வயம்ப கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக ஒரேயொரு வீரர் (சமிது அதிகாரி) மாத்திரமே இருபது ஓட்டங்கள் கடக்க அஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் யூசுப் வெறும் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

தொடர்ந்து வயம்ப றோயல் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஓன் முறையில் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அஸ்ஹர் கல்லூரியினை விட 182 ஓட்டங்கள் பின்தங்கியவாறு ஆரம்பித்தனர்.

இரண்டாம் இன்னிங்ஸிலும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறிய வயம்ப றோயல் கல்லூரி அணியினர், 55.2 ஓவர்களில் 165 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட்

வயம்ப றோயல் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் கவிஷ்க விஜயரத்ன அரைச்சதம் (54) ஒன்றினை பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிற்க அவ்வணியின் ஏனைய வீரர்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இதேநேரம் அஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் சாக்கீர் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்தும், மொஹமட் ஜஸீல் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அக்குரனை அஸ்ஹர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –  281 (66.5) மொஹமட் அர்ஹாம் 82, மொஹமட் சஹீம் 68, பஹான் பண்டார 5/76

வயம்ப றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 99 (31) சமிந்து அதிகாரி 23, மொஹமட் யூசுப் 5/21, மொஹமட் சாக்கீர் 2/07

வயம்ப றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o  – 165 (55.2) கவிஷ்க விஜேரத்ன 54*, மொஹமட் சாக்கீர் 5/25, மொஹமட் ஜஸீல் 3/58

போட்டி முடிவுஅஸ்ஹர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க