மரதனில் உலக சாதனை செய்த வீரர் தீடிர் மரணம்

97

மரதன் ஓட்டப் போட்டிக்கான உலக சாதனைக்குச் சொந்தக்காரராக இருக்கும் கென்ய நாட்டினைச் சேர்ந்த கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum) வீதி விபத்து ஒன்றில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியக் கிண்ண கால்பந்தில் சம்பியனானது கத்தார்

குறித்த கோர விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இரவு கென்ய நாட்டில் வைத்து இடம்பெற்றிருப்பதோடு இந்த விபத்தில் கெல்வின் கிப்டம் உடைய பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானாவும் (Gervais Hakizimana) சேர்ந்து மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் விபத்து நடைபெறும் நேரத்தில் இவர்களுடன் பயணித்த மூன்றாவது நபர் தற்போது தீவிர சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

கெல்வின் கிப்டம் 2023ஆம் ஆண்டுக்கான சிகாகோ மரதன் ஓட்டப் போட்டியினை 2:00:35 என்ற நேரக் கணக்கில் ஓடி முடித்து உலக சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கெல்வினின் மரணச் செய்தி அவரது மனைவி வாயிலாக ஒலிம்பிக் இணையதளத்திடம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. கெல்வின் மரணமடையும் போது அவருக்கு 24 வயது எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேவேளை கெல்வினின் மரணச் செய்தி கென்ய நாடு மாத்திரமின்றி உலகெங்கிலும் காணப்படும் ஏனைய தடகள, வீராங்கனைகளுக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<