ஸ்மித்தின் தலைமைப் பதவிக்கான இரண்டு வருட தடைக்காலம் முடிவு

60

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் குறித்த தடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்  நியமிக்கப்படலாம் என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

கொரோனா வைரஸினால் இலங்கையில்……………….

30 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். 

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணை தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஓராண்டு போட்டித் தடையையும், இளம் வீரர் கெமருன் பேங்கிராப்ட்டுக்கு 9 மாதகால போட்டித் தடையையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விதித்தது.  

அத்துடன், ஸ்மித்தின் தலைவர் பதவியும், டேவிட் வோர்னரின் துணைத் தலைவர் பதவியும் பறிபோனது

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடைக்காலம் முடிந்து இருவரும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினர்.  

இதுஇவ்வாறிருக்க, குறித்த குற்றச்சாட்டின்போது தலைவர் பதவியேற்க ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இந்த மார்ச் 29ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்தது.

இதனிடையே, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக ஸ்மித் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

தற்போது அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், டெஸ்ட் அணிக்கு டிம் பெய்னும் தலைவர்களாக செயற்பட்டு வருவதால், உலகின் நம்பர் 1 டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு உடனடியாக தலைவர் பதவி கிடைப்பது சந்தேகம் என கூறப்படுகின்றது

கொரோனா பீதியால் எந்தவித கிரிக்கெட் தொடர்களும் இல்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ஸ்டீவ் ஸ்மித், தனது அடுத்த எதிர்பார்ப்பு குறித்து கூறுகையில்

37 வயதானாலும் கிரிக்கெட் விளையாடத் தயார்: ஜேம்ஸ் அண்டர்சன்

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும்……………………

”இப்போதைக்கு .பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றவில்லை. இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தி .பி.எல். குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன்

இருப்பினும், ஏதாவது ஒரு கட்டத்தில் .பி.எல். கிரிக்கெட் தொடங்கினால் அதற்கு புத்துணர்ச்சியுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். தினமும் 10 கிலோமீற்றர் ஓடுகிறேன். கிட்டார் இசைக்கவும் பழகுகிறேன்” என்றார்.

அதேநேரம், டிம் பெய்னுக்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இதுகுறித்து அவர் கூறுகையில், ”டிம் பெய்ன் சிறந்த தலைவராக செயற்பட்டு வருகிறார். தலைவர் சுமையை வைத்துக் கொண்டு துடுப்பாட்ட வீரராக பிரகாசிப்பது கடினம் என்று ஸ்மித் கூறியிருந்தார்

டிம் பெய்ன் தற்போது அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 தலைவராக ஆரோன் பின்ச் இருக்கிறார். 

இதற்கிடையே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். எனவே மனரீதியிலும், உடல் ரீதியிலும் வலிமையுடன் இருப்பதற்கே நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் ஜூலை மாதம் பங்களாதேஷ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதேபோல இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடருக்கும் திட்டமிடப்பட்டுள்ளது

ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<