ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ் முதல் வாரத்தில் வெற்றி

340
Premier League Div l Supersix - week l

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நாடாத்தப்படும் பிரிவு ஒன்றுக்கான பிரீமியர் லீக் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் வாரத்திற்கான போட்டிகள் சனி (06) மற்றும் ஞாயிற்றுக் கிழமகளில் (07) நடந்து முடிந்தன.

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்ட லீக் போட்டிகளில் இரு குழுக்களிலும் முதல் 3 இடங்களையும் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுான சுபர் சிக்ஸ் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன.

குழு A குழு B
திஹாரிய யூத் வி.க ரட்னம் வி.க – கொழும்பு
கொம்ரெட்ஸ் வி.க – பதுளை ரெட் ஸ்டார் வி.க பேருவளை
ரெட் சன் வி.க – கம்பளை   செரண்டிப் கா.க – மாவனல்லை

செரண்டிப் கால்பந்துக் கழகம் எதிர் ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

செரண்டிப் மற்றும் ரெட் ஸ்டார் அணிகளிடையிலான போட்டி நாவலபிடிய ஐயதிலக விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆரம்பத்தில் பெறப்பட்ட கோலின் மூலம் ரெட் ஸ்டார் அணி கடுமையான போராட்டத்தின் பின்னர் போட்டியில் வெற்றியை தன்வசமாக்கியது.

இறுதி நேர அபாரத்தால் செரண்டிப்புடனான ஆட்டத்தை சமப்படுத்திய ரெட் ஸ்டார்

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து நீண்ட தூரம்..

போட்டியை ஆரம்பித்த ரெட் ஸ்டார் அணி முதல் பத்து நிமிடங்களிலே அதிகமான நேரத்தை எதிரணியின் எல்லையிலிருந்த வண்ணமே விளையாடியது. இதன் பலனாக 11ஆவது நிமிடத்தில் முஹமட் ஸாஹிம் மூலம் எல்லைக் கோட்டிலிருந்து பெனால்டி எல்லைக்குள் எறியப்பட்ட பந்தை எதிரணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடுவதில் விட்ட தவறால், ரெட் ஸ்டார் அணியின் முன்கள வீரர் பீடர் மூலம் அவ்வணிக்கு முதல் கோல் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் போட்டியின் 33ஆவது நிமிடத்தில் செரண்டிப் வீரர் முஹமட் றியாஸ் மூலம் மத்திய களத்திலிருந்து வழங்கப்பட்ட பந்தை பெற்ற அணித் தலைவர் முஹமட் ஷெரோன், கோலிற்கு அருகிலிருந்த தனது அணியின் சக வீரரான சிமொனிற்கு பந்தை வழங்கினார். சிமொன் தான் பெற்ற பந்தை கோலை நோக்கி வேகமாக உதைந்தபோதும் பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

போட்டியின் 35ஆம் நிமிடத்தில ரெட் ஸ்டார் அணியின் முன்களத்தில் நிலவிய சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் தன்னையடைந்த பந்தை பீடர் பெற்று, பின்கள வீரர்களின் சவாலையும் தாண்டி பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலையிலிருந்து கோலை நோக்கி உதைந்த போதும், பந்து செரண்டிப் கோல் காப்பாளர் நஜான் மூலம் தடுத்து வெளியேற்றப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து செரண்டிப் அணிக்கு போட்டியின் 38ஆம் நிமிடத்தில் முதல் பாதியின் மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டியது. பின்களத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பட்ட பந்தை முஹமட் அப்துல்லா தனது தலையால் முட்டி ஷெரோனிற்கு வழங்கினார். ஷெரோன் தான் பெற்ற பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்றபோதும் கோல் காப்பாளர் மொஹமட் நியாப் மூலம் பந்து சிறப்பாக தடுக்கப்பட்டது.

முதல் பாதியின் நிறைவிலே ரெட் ஸ்டார் அணியை விட அதிகமான வாய்ப்புக்களை செரண்டிப் அணி பெற்ற போதும், அவற்றின மூலம் போட்டியை சமப்படுத்த அவ்வணி வீரர்களிற்கு இயலாமல் போனது. செரண்டிப் வீரர்களால் பல இலகுவான வாய்ப்புகள் வீணடிக்கப்பட்ட நிலையில் முதல்பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 0 – 1 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்  

இரண்டாம் பாதியை ஆரம்பித்த செரண்டிப் அணி முதல் பாதி போன்றே அதிகமான கோல்களை பெறும் வாய்ப்புக்களை பெற்றது. அதே நேரம் ரெட் ஸ்டார் அணியினர் அதற்கோற்றாற் போல் தான் பெற்ற ஒரு கோலுடன் பந்தை தடுத்தாடுவதிலே அதிகமாக ஈடுபட்டனர். அதனை அவர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றினர்.  

DCL சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டித் தினத்தில் மாற்றம்

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும்..

எனினும் இரண்டாம் பாதியின் முதல் வாய்ப்பை ரெட் ஸ்டார் அணி போட்டியின் 53ஆம் நிமிடத்தில் பெற்றது. அவர்களது எல்லையிலிருந்து தடுத்தாடப்பட்டு எதிரணியின் எல்லையை வந்தடைந்த பந்தை, செரண்டிப் வீரர்கள தடுத்தாடுவதில் விடப்பட்ட தவறின் மூலம் அணித் தலைவர் ஹமீத் தான் பெற்ற பந்தை எதிரணியின் பெனால்டி எல்லை வரை கொண்டு சென்றார். இதன்போது கோல் காப்பாளர் பந்தை தடுத்தாட வருவதை அவதானித்த ஹமீத், தனது இடது பாதத்தால் கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் பந்தானது பின்கள வீரர்களால் தடுத்தாடப்பட்டது.

அதனை தொடர்ந்து போட்டியின் 60ஆம் நிமிடத்தில் செரண்டிப் அணியின் பின்களத்திலிருந்து, எதிரணியின் மத்தியகளத்திற்கு தூரப்பந்து பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ஷெரோன், பந்தை கோலை நோக்கி எடுத்துச் சென்றபோதும் நியாபின் தடுப்பைத் தாண்டி அவரால் தனது அணிக்கான கோலை பெற முடியாமல் போனது.

மீண்டும் போட்டியின் 80ஆம் நிமிடத்தில் தரை வழியாக பின்களத்திலிந்து முஹமட் ஷெரோனிற்கு வழங்கப்பட்ட பந்தை பின்கள வீரர்களையும் தாண்டி வலது பக்க மூலைக்கு ஷெரோன் உள்ளனுப்பினார். உள்ளனுப்பபட்ட பந்தை பெற்ற அப்துல்லா, பின்கள வீரர்களையும் தாண்டி கோலை நோக்கி உதைந்த போதும் பந்து மீண்டும் நியாபினால் தடுக்கப்பட்டது.  

செரண்டிப் அணி போட்டியில் அதிகமான வாய்ப்புக்களை பெற்ற போதும் சிறந்த நிறைவைப் பெறாததால், ரெட் ஸ்டார் அணி முதல் பாதியில் பெற்ற கோலின் மூலம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

முழு நெரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 0 – 1 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்  

கோல் பெற்றோர்

ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்: பீடர் 11′


ரட்னம் விளையாட்டுக் கழகம் எதிர் ரெட் சன் விளையாட்டுக் கழகம்

கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஆதிக்கம் செலுத்திய போதும் ஆட்டத்தின் இறுதியில் ரட்னம் விளையாட்டுக் கழகம் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

எகிப்து கால்பந்து நட்சத்திரம் சலாஹ்வுக்கு மற்றுமொரு விருது

லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் எகிப்தின்..

போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே மொஹமட் ஆகில் பெற்றுக்கொடுத்த கோலின் மூலம் ரட்னம் வீரர்கள் முன்னிலை பெற்றனர். அதே உத்வேகத்துடன் ஆடிய அவ்வணியினருக்கு ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் நிசல் நிலங்க மற்றொரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் நீண்ட நேரத்திற்கு எந்தவித கோல்களும் பெறப்படாமல் இருந்த நிலையில், முதல் பாதி நிறைவடையும் தருவாயில் ரெட் சன் வீரர் மைக்கல் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: ரட்னம் விளையாட்டுக் கழகம் 2 – 1 ரெட் சன் விளையாட்டுக் கழகம்

மீண்டும் இரண்டாவது பாதி ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே ரெட் சன் வீரர் விமுக்தி மதுமால் ஒரு கோலைப் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சமநிலையடைந்தது.  

எனினும் அவர்களது முன்னிலை 55ஆவது நிமிடத்தில் தகர்க்கப்பட்டது. இலங்கை 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் அமான் பெற்ற கோல் மூலம் ரட்னம் மீண்டும் முன்னிலை பெற்றது.

மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் ரெட் சன் அணிக்காக மைக்கல் தனது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுக்க ஆட்டம் மீண்டும் சமநிலையடைந்தது. எனவே தலா 3 கோல்களுடன் சென்றுகொண்டிருக்கையில் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

எனினும் மொஹமட் ஆகிலும் தனது இரண்டாவது கோலைப் பெற்றுகொள்ள ரட்னம் அணி தமக்கான நான்காவது கோலைப் பெற்றது. அதுவே ஆட்டத்தின் இறுதி கோலாகவும் இருந்தது. இதனால் ரட்னம் வீரர்கள் மேலதிக ஒரு கோலினால் சுபர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: ரட்னம் விளையாட்டுக் கழகம் 2 – 1 ரெட் சன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரட்னம் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஆகில் 02’&78’, நிசல் நிலங்க 14’, மொஹமட் அமான் 55’

ரெட் சன் விளையாட்டுக் கழகம் – மைக்கல் 44’&60’, விமுக்தி மதுமால் 46’


திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் எதிர் கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகம்

இவ்விரு கழகங்களிடையே நடைபெற்ற போட்டியில், முதல் பாதியின் போது பெறப்பட்ட மூன்று கோல்களின் மூலம் வெற்றியை தன் வசமாக்கியது திஹாரிய யூத் அணி.

இரண்டாம் பாதியிலே மிகவும் சிறப்பாக ஆடிய கொம்ரெட்ஸ் அணி இரு கோல்களை பெற்றபோதும் மேலதிகமான ஒரு கோலின் மூலம் திஹாரிய யூத் அணி போட்டியை வென்றது. எனினும் போட்டியானது இறுதி நிமிடம் வரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத வண்ணமே அமைந்நது.

கோல் பெற்றோர்

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம்: இவான்ஸ் 16′, 29′ & பெரேரா 19’

கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகம்: ஸம்ஹர் 50’, சீபுஸர் 54’