டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI

48

மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது.

LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதாவது Dugout இல் காணப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டவீரர் டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் கீய்ரோன் பொலார்ட் ஆகியோர் “Wide” பந்திற்கான கோரிக்கையை முன்வைக்குமாறு சைகை வழங்கினர்.

இவ்வாறு வெளியில் இருந்து மைதானத்திற்குள் ஆடும் வீரர்களுக்கு சைகை வழங்கியமைக்காகவே கீய்ரோன் பொலார்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்கு அபாரதம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. IPL விதிமுறைகளின் பிரகாரம் மைதானத்திற்குள் இருக்கும் வீரர்கள் மேன்முறையீடு (Review) ஒன்றை மேற்கொள்ள வெளியில் இருந்து உதவிகளை பெறக்கூடாது என்பது முக்கியமான ஒரு விடயமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

எனவே குறிப்பிட்ட தவறுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் மற்றும் கீய்ரோன் பொலார்ட் ஆகியோர் தங்களது போட்டி ஊதியத்தில் 20% இணை அபாரதமாக செலுத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<