பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை சோதித்த ஆஸி.

632

இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் ஆகிய அணிகளுக்கு இடையில் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது. இந்த பயிற்சிப் போட்டியை பொருத்தவரை இலங்கை அணி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என்ற இரண்டிலும் தங்களுடைய சிறந்த பெறுபேற்றை பெறத் தவறியிருந்தது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரலிருந்து விலகும் ஜோஸ் ஹேசல்வூட்

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹெசல்வூட் முதுகு உபாதை ஒன்றின் …

போட்டியின் இறுதி நாளான இன்று துடுப்பெடுத்தாடிய கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணி, 99 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்தது. இதில், இன்றைய தினம் அந்த அணி மேலதிகமாக ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்த நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தங்களுடைய ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதில், கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் சதம் கடந்திருந்த குர்டிஸ் பெட்டர்சன் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் மெர்னஸ் லெபுச்செங் 50 ஓட்டங்கைளையும், வில் பகோவ்ஸ்கி ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் லஹிரு குமார, ராஜித மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 365 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில், இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 131 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லஹிரு திரிமான்ன மாத்திரம் இறுதிவரை நிதானமாக துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினர்.

லஹிரு திரிமான்னவை தவிர இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரொஷேன் சில்வா 23 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களுடன் டில்ருவான் பெரேரா 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். பந்து வீச்சில், ஜொன் ஹோல்லண்ட் 4 விக்கெட்டுகளையும், நீசர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தீவிரமான உபாதையிலிருந்து தப்பிய குசல் மெண்டிஸ்

கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் …

இந்தப் போட்டியை பொருத்தவரை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணி 316 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியதுடன், இலங்கை அணி 176 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியிருந்தது.

இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி குயின்ஸ்லாந்தின் த கெப்பா (The Gabba) மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Australia Board XI

316/5 & 224/3

(59 overs)

Result

Sri Lanka

176/5 & 131/6

(51 overs)

Match Drawn

Australia Board XI’s 1st Innings

Batting R B
Matt Renshaw c D Karunarathne b D Chameera 7 35
Joe Burns c D De Silva b K Rajitha 4 13
Marnus Labuschagne b D Chameera 6 10
Kurtis Patterson not out 157 212
Will Pucovski c K Rajitha b D Chameera 23 54
Jason Sangha c D Chameera b K Rajitha 3 9
Jake Doran not out 102 129
Extras
14 (b 1, lb 1, nb 12)
Total
316/5 (75 overs)
Fall of Wickets:
1-11 (J Burns, 5.4 ov), 2-20 (M Labuschagne, 8.3 ov), 3-25 (M Renshaw, 10.2 ov), 4-88 (W Pucovski, 28.6 ov), 5-98 (J Sangha, 31.2 ov)
Bowling O M R W E
Nuwan Pradeep 2 0 6 0 3.00
Kasun Rajitha 17 2 71 2 4.18
Dushmantha Chameera 16 3 57 3 3.56
Suranga Lakmal 13 2 43 0 3.31
Dilruwan Perera 12 1 54 0 4.50
Dhananjaya de Silva 5 1 13 0 2.60
Lakshan Sandakan 10 0 70 0 7.00

Sri Lanka’s 1st Innings

Batting R B
Dimuth Karunarathne lbw by S Boland 44 92
Lahiru Thirimanne c & b C Tremain 32 109
Dinesh Chandimal c K Patterson b M Labuschagne 32 80
Sadeera Samarawickrama c K Patterson b S Boland 11 24
Roshen Silva not out 36 91
Dhananjaya de Silva c M Renshaw b M Labuschagne 14 42
Niroshan Dickwella not out 4 12
Extras
3 (lb 3)
Total
176/5 (75 overs)
Fall of Wickets:
1-65 (D Karunarathne, 27.1 ov), 2-87 (L Thirimanne, 38.1 ov), 3-103 (S Samarawickrama, 44.4 ov), 4-137 (D Chandimal, 59.4 ov), 5-169 (D De Silva, 71.3 ov)
Bowling O M R W E
Chris Tremain 18 2 32 1 1.78
Michael Nesser 16 2 41 0 2.56
Scott Boland 16 5 37 2 2.31
Jon Holland 15 1 35 0 2.33
Marnus Labuschagne 9 0 27 2 3.00
Jason Sangha 1 0 1 0 1.00

Australia Board XI’s 2nd Innings

Batting R B
Matt Renshaw lbw by K Rajitha 10 29
Joe Burns c D De Silva b D Chameera 22 18
Marnus Labuschagne c D De Silva b L Kumara 50 101
Kurtis Patterson not out 102 136
Will Pucovski not out 33 70
Extras
7 (lb 6, w 1)
Total
224/3 (59 overs)
Fall of Wickets:
1-24 (J Burns, 5.4 ov), 2-44 (M Renshaw, 10.2 ov), 3-134 (M Labuschagne, 37.5 ov)
Bowling O M R W E
Lahiru Kumara 14 2 48 1 3.43
Dushmantha Chameera 4 0 28 1 7.00
Dimuth Karunarathne 3 1 8 0 2.67
Kasun Rajitha 3 0 9 1 3.00
Lahiru Thirimanne 3 0 8 0 2.67
Lakshan Sandakan 14 1 53 0 3.79
Suranga Lakmal 6 3 16 0 2.67
Dilruwan Perera 8 0 26 0 3.25
Dhananjaya de Silva 4 0 22 0 5.50

Sri Lanka’s 2nd Innings

Batting R B
Dimuth Karunarathne lbw by M Neser 3 16
Lahiru Thirimanne not out 46 121
Niroshan Dickwella c J Burns b M Neser 19 23
Dhananjaya de Silva b J Holland 2 9
Kusal Janith b J Holland 3 12
Dilruwan Perera lbw by J Holland 14 28
Sadeera Samarawickrama b J Holland 6 20
Roshen Silva not out 23 64
Suranga Lakmal not out 7 14
Extras
8 (b 6, lb 1, nb 1)
Total
131/6 (51 overs)
Fall of Wickets:
1-3 (D Karunarathne, 3.5 ov), 2-29 (N Dickwella, 9.3 ov), 3-35 (D De Silva, 13.3 ov), 4-39 (K Janith, 17.1 ov), 5-72 (D Perera, 25.1 ov), 6-82 (S Samarawickrama, 29.6 ov)
Bowling O M R W E
Chris Tremain 9 1 32 0 3.56
Michael Nesser 5 2 8 2 1.60
Jon Holland 15 2 28 4 1.87
Scott Boland 11 4 28 0 2.55
Marnus Labuschagne 9 1 26 0 2.89
Jason Sangha 2 0 2 0 1.00







 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<