SAG தொடருக்கான இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணி அறிவிப்பு

76

நேபாளத்தில் ஆரம்பமாகியுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 20 பேர்கொண்ட இலங்கை மகளிர் கால்பந்தாட்ட குழாத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் நடைபெற்ற தொடர்களில் பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

SAG போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் வரும் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம்…

இதில், முக்கியமாக தெள்ளிப்பளை மஹாஜன கல்லூரியைச் சேர்ந்த பானு பாஸ்கரன் 20 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளார். இவர், 2017ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கான விளையாட்டு போட்டியில், 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடியிருந்தார். 

குறித்த தொடரில் தெள்ளிப்பளை மஹாஜன கல்லூரி அணி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ரொஹன் திலக் அல்போன்சு செயற்படவுள்ளார்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணி முதல் போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இரண்டாவது போட்டியில் இந்திய அணியையும், மூன்றாவது போட்டியில் மாலைத்தீவு அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை மகளிர் குழாம்

எராந்தி லியனகே, அயோமி சானிகா விஜேரத்ன, சலனி குமாரி ஏக்கநாயக்க, பிரவீனா மதுகி பெரேரா, செவ்வந்தி சுபேசிங்க, லக்ஷிகா ருஷ்னி குணவர்தன, வத்சலா பிரியதர்ஷனி, துஷானி மதுசிகா, சஞ்சீவனி பெரேரா, யொஹானி வீரசிங்க, மஹீசிகா குமுதினி, பூர்னிமா சந்தமாலி, புத்திக தமயந்தி, இமேஷா ஸ்டீபனி டயஸ், செல்வராஜ் யுவரானி, குமுதினி நிலுக்ஷி குமாரி, ஓசதி ஸ்ரீ ஜயம்பதி, உமா பிரியதர்ஷனி, காயத்ரி மந்தஹாசி நாணயகார, பாஸ்கரன் பானு 

போட்டி அட்டவணை

  • இலங்கை எதிர் நேபாளம் – டிசம்பர் 3
  • இலங்கை எதிர் இந்தியா – டிசம்பர் 5
  • இலங்கை எதிர் மாலைத்தீவு – டிசம்பர் 7

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<