டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இளம் வயதில் 10,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் எலஸ்டயர் குக் பெற்றுள்ளார்.

31 வயதாகும் எலஸ்டயர் குக் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட 36 ஓட்டங்கள் பின்னிலையில் தான் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை ஆரம்பித்து இருந்தார்.

ஐ.பி.எல் வரலாற்றில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர்

இலங்கை அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு 79 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய எலஸ்டயர் குக் சுரங்க லக்மால் வீசிய பந்துக்கு பவுண்டரி அடித்ததன் மூலமே இளம் வயதில் 10,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், ஒட்டு மொத்தமாக 12ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் குக் பெற்றுள்ளார்.

இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 2005ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எட்டினார். அப்போது சச்சினுக்கு வயது 32. அத்தோடு இந்த மைல்கல்லை சச்சின், லாரா, சங்கா ஆகியோர் 195 இன்னிங்ஸ்களிலேயே கடந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்