ஐ.பி.எல் வரலாற்றில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர்

1704
Courtesy @BCCI

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடக்கம் வருடாந்தம் ஐ.பி.எல். கிரிக்கட் தொடர் நடைபெற்று வருகின்றன.

இத்தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் பட்டியலில் மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் 251 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார். அத்தோடு ஐ.பி.எல் வரலாற்றில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

9ஆவது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் க்றிஸ் கெய்ல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஆடினார். அவர் 38 பந்துகளை சந்துந்து அதிரடியாக  76 ஓட்டங்களைப் பெற்று பெங்களூர் அணிக்கு நல்ல ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார். அவர் பெற்ற 76 ஓட்டங்களில்  4 பவுண்டரிகள் மற்றும்  8 சிக்ஸர்கள் உள்ளடங்கும்.

அவர் 7ஆவது சிக்ஸரை எடுத்தபோது அவர் 250 சிக்ஸரைத் தொட்டு சாதனை புரிந்தார். இதுவரை 92 ஐ.பி.எல் போட்டிகளில் 91 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள கெயில் 251 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா  163 சிக்ஸர்களை  அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார்.

அந்த பட்டியலில் இலங்கை அணி வீரர்களான மஹேல ஜயவர்தன 39 சிக்ஸர்களோடு 45ஆவது இடத்திலும், சனத் ஜயசூரிய 39 சிக்ஸர்களோடு 46ஆவது இடத்திலும், இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் 28 சிக்ஸர்களோடு 62ஆவது இடத்திலும், குமார் சங்கக்கார 27 சிக்ஸர்களோடு 64ஆவது இடத்திலும், திசர பெரேரா 26 சிக்ஸர்களோடு 68ஆவது இடத்திலும், திலகரத்ன டில்ஷான் 24 சிக்ஸர்களோடு 69ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த பட்டியலிலுள்ள முதல் 10 வீரர்கள்

1. க்றிஸ் கெயில் – 251 சிக்ஸர்கள்
2. ரோஹித் ஷர்மா – 163 சிக்ஸர்கள்
3. சுரேஷ் ராயினா – 160 சிக்ஸர்கள்
4. விராத் கொஹ்லி – 149 சிக்ஸர்கள்
5. எம்.எஸ் டோனி – 140 சிக்ஸர்கள்
6. டி விலியர்ஸ் – 140 சிக்ஸர்கள்
7. யூசுப் பதான் – 140 சிக்ஸர்கள்
8. டேவிட் வோர்னர் – 134 சிக்ஸர்கள்
9. யுவராஜ் சிங் – 133 சிக்ஸர்கள்
10. கிரோன் பொலார்ட் – 125 சிக்ஸர்கள்

1st 10 most 6 hitters - Courtesy IPLT20 website

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்