பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை நீச்சல் குழாம் அறிவிப்பு

148

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக தகுதியைப் பெற்றுக்கொண்ட 6 பேர் கொண்ட இலங்கை நீச்சல் குழாமை இலங்கை நீர்நிலை விளையாட்டு சம்மேளனம் அறிவித்துள்ளது.

பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை ஆரம்பம்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்..

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நீச்சல் குழாமில் 4 வீரர்களும், 2 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களுள் 2016 றியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மெத்யூ அபேசிங்க மற்றும் கிமிகோ ரஹீம் ஆகிய அனுபவமிக்க வீரர்களும் இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இதில் உபாதைக்குப் பிறகு மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ள மெத்யூ அபேசிங்க, அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் ஒஹியோவில் நடைபெற்ற திறந்த நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சலில் 5ஆவது இடத்தையும், 200 மீற்றர் சாதாரண நீச்சலில் 18ஆவது இடத்தையும் பெற்றார். இதனால், பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மெத்யூ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல இலங்கை நீச்சல் அணிக்காக அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கிமிகோ ரஹீமும் இம்முறை பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் சாதாரண மற்றும் மல்லாக்கு நீச்சல் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 வயதான கிமிகோ ரஹீம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய குறுந்தூர நீச்சல் போட்டித் தொடரின் திறந்த வயதுப்பிரிவில் தான் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் புதிய தேசிய சாதனை படைத்திருந்தமையும் இங்கு நினைவுகூறத்தக்கது.

கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டிகளில் விமானப்படை ஆதிக்கம்

தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் நடைபெற்ற…

எனினும், 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிமிகோ ரஹீம், பெண்களுக்கான 100 மீற்றர் மல்லாக்கு நீச்சலில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தார்.

இதேநேரம், இலங்கை தேசிய அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அபேசிங்க குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரும், மெத்யூ அபேசிங்கவின் இளைய சகோதரருமான கைல் அபேசிங்கவும் இம்முறை பொதுநலவாய நாடுகள் போட்டிகளில் முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.

முன்னதாக அவர், கடந்த வருடம் பஹாமாஸில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் இளையோர் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான சாதாரண நீச்சலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்ததுடன், 2015இல் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற திறந்த குறுகிய கால நீச்சல் வல்லவர் போட்டியில் 2ஆவது இடத்தைப் பெற்று புதிய தேசிய சாதனை படைத்த செரன்த டி சில்வாவும் முதற்தடவையாக இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவியைக் கைப்பற்றிய முதல் தமிழராக சுரேஷ் சுப்ரமணியம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய…

முன்னதாக 2016இல் 200 மற்றும் 50 மீற்றர்படப்லை” நீச்சல் போட்டியில் இரண்டு புதிய தேசிய சாதனைகளைப் படைத்த செரன்த டி சில்வா, 100 மீற்றர்படப்லை” போட்டியை 54.99 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்திருந்த போதிலும், றியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை 0.87 செக்கன்களினால் தவறவிட்டார். இவர் தற்போது புளோரிடாவிலுள்ள பொல்லிஸ் நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை நீச்சல் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான அகலன்க பீரிஸ், அண்மையில் நிறைவுக்கு வந்த பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்டு 50 மீற்றர்படப்லை” நீச்சலில் 26.98 செக்கன்களிலும், 100 மீற்றர்படப்லை” நீச்சலில் 58.59 செக்கன்களிலும் நிறைவுசெய்து இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.  

இதேவேளை, கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியைச் சேர்ந்த வினோலி களுஆரச்சி, முதற்தடவையாக இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான தனிநபர் நீச்சல் போட்டிகளில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.