நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்த கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்!

Lanka Premier League 2024

96
Colombo Strikers

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி ஏலத்துக்கு முன்னர் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. 

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலில் இரண்டு முன்னணி வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

>> ஹார்திக் பாண்டியாவுக்கு 2025 ஐ.பி.எல் இல் போட்டித் தடை

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சதாப் கான் மற்றும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கிளேன் பிலிப்ஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அதேநேரம் இலங்கை வீரர்களை பொருத்தவரை ஜப்னா கிங்ஸ் அணிக்கு மூன்று தடவைகள் கிண்ணம் வென்றுக்கொடுத்த தலைவர் திசர பெரேரா கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அதேநேரம் தம்புள்ள அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய சதீர சமரவிக்ரமவையும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதேவேளை கடந்த ஆண்டு கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய சாமிக்க கருணாரத்ன மற்றும் நிபுன் தனன்ஜய ஆகியோர் இந்த ஆண்டும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<