Home Tamil தம்புள்ளை அணிக்கு ஐந்தாவது தொடர் தோல்வி

தம்புள்ளை அணிக்கு ஐந்தாவது தொடர் தோல்வி

Lanka Premier League 2022

112

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி தம்புள்ளை ஓரா அணிக்கு எதிராக 09 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட்டை தவறவிடும் நசீம் ஷா

மேலும் இந்த வெற்றி கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு தொடரில் 3ஆவது வெற்றியாக அமைய இது தம்புள்ளை ஓரா அணிக்கு தொடரில் ஐந்தாவது தொடர் தோல்வியாக மாறுகின்றது.

நேற்று (14) கண்டி நகரில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ளை ஓரா வீரர்களை துடுப்பாடப் பணித்திருந்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணியினர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு வெறும் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 89 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

தம்புள்ளை ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் தசுன் ஷானக்க அதிகபட்சமாக 20 ஓட்டங்கள் எடுக்க ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருந்தனர்.

இதேநேரம் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித சிறப்பாக செயற்பட்டு 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, ஜெப்ரி வன்டர்செய் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 90 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி சரித் அசலன்கவின் அதிரடி அரைச்சதத்துடன் போட்டியின் வெற்றி இலக்கை 11.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களுடன் அடைந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தததோடு 36 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் உடன் 58 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் தினேஷ் சந்திமாலும் 31 ஓட்டங்களுடன் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

இதேநேரம் தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில் பிரமோத் மதுசான் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணி வீரரான கசுன் ராஜித தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Colombo Stars
90/1 (11.3)

Dambulla Aura
89/10 (13.5)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Shevon Daniel lbw b Kasun Rajitha 0 3 0 0 0.00
Jordan Cox c Suranga Lakmal b Kasun Rajitha 16 9 3 0 177.78
Bhanuka Rajapaksha c Dinesh Chandimal b Suranga Lakmal 4 4 1 0 100.00
Tom Abell b Kasun Rajitha 0 2 0 0 0.00
Dasun Shanaka c Benny Howell b Jeffrey Vandersay 20 11 1 2 181.82
Noor Ahmad  c Nawod Paranavithana b Jeffrey Vandersay 2 4 0 0 50.00
Chathuranga de Silva run out (Niroshan Dickwella) 11 11 1 0 100.00
Paul van Meekeren c Ravi Bopara b Kasun Rajitha 0 6 0 0 0.00
Pramod Madushan not out 23 26 3 0 88.46
Lahiru Kumara b Karim Janat 1 6 0 0 16.67


Extras 12 (b 0 , lb 4 , nb 0, w 8, pen 0)
Total 89/10 (13.5 Overs, RR: 6.43)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 22 5 5.50
Suranga Lakmal 3 0 33 1 11.00
Jeffrey Vandersay 4 0 10 2 2.50
Karim Janat 2.5 0 20 1 8.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b Pramod Madushan 0 1 0 0 0.00
Dinesh Chandimal b 31 32 3 0 96.88
Charith Asalanka b 58 36 5 4 161.11


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 90/1 (11.3 Overs, RR: 7.83)
Bowling O M R W Econ
Pramod Madushan 2 1 3 1 1.50
Paul van Meekeren 2 0 24 0 12.00
Noor Ahmad  3.3 0 25 0 7.58
Lahiru Kumara 3 0 27 0 9.00
Chathuranga de Silva 1 0 11 0 11.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<