பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் அணித்தலைவராக தசுன் ஷானக்க

95

2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் கொமில்லா வோரியர்ஸ் அணியின் தலைவராக இலங்கை டி20 அணியின் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டவரும், சகலதுறை வீரருமான தசுன் ஷானக்க பெயரிடப்பட்டுள்ளார். 

கிரிக்கெட் உலகில் நடைபெற்றுவரும் டி20 லீக் தொடர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்டுவரும் பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் பிரபல்யமான தொடர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்ற குறித்த தொடரில் மொத்தமாக 7 அணிகள் பங்கேற்கின்றன. 

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இலங்கை?

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு…

2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் கடந்த மாதம் (நவம்பர்) 17 ஆம் திகதி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு வீரர்களாக, அதாவது பங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய நாட்டு வீரர்களாக 33 வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டனர். 

குறித்த 33 வீரர்களிலும் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 6 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ, மற்றுமொரு அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, பானுக ராஜபக்ஷ, சகலதுறை வீரர்களான தசுன் ஷானக்க, திஸர பெரேரா மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் 4 அணிகளினால் கொள்வனவு செய்யப்பட்டனர். 

அவிஷ்க பெர்னான்டோ சட்டொக்ரம் செலஞ்சர்ஸ் அணியிலும், குசல் பெரேரா, பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் கொமில்லா வோரியர்ஸ் அணியிலும், திஸர பெரேரா டாக்கா பிளாட்டுன் அணியிலும், ஜீவன் மெண்டிஸ் சில்லட் தண்டர்ஸ் அணியிலும் கொள்வனவு செய்யப்பட்டனர். 

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள்…..

இதில் கொமில்லா வோரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன் ஷானக்க அவ்வணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயதுடைய சகலதுறை வீரரான தசுன் ஷானக்க 2015 ஆம் ஆண்டு இலங்கை டி20 அணியில் அறிமுகம் பெற்று 35 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இறுதியாக இலங்கை டி20 அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட தசுன் ஷானக்க பாகிஸ்தான் அணியை 3-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்திருந்தார். மேலும் 80 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட ஷானக்க, கழகங்களின் அணித்தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

2019 – 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் 7 ஆவது பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் நாளை (11) ஆரம்பமாகின்றது. நாளைய தினம் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் சட்டொக்ரம் செலஞ்சர்ஸ் மற்றும் சில்லட் தண்டர்ஸ் அணிகளும் இரண்டாவது போட்டியில் தசுன் ஷானக்கவின் கொமில்லா வோரியர்ஸ் மற்றும் ராங்பூர் ரேஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<