இனி நாணய சுழற்சி இல்லை; அறிமுகமாகிறது துடுப்பாட்ட மட்டை சுழற்சி

2123
Image Courtesy - www.abc.net.au

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள பிக்பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில், நாணய சுழற்சிக்கு பதிலாக “துடுப்பாட்ட மட்டை சுழற்சி” என்ற புதிய முறைமை ஒன்றினை கையாள உள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக்கிற்கான தலைமை அதிகாரி கிம் மெக்கோனி தெரிவித்துள்ளார்.

பிக் பேஷ் லீக்கில் ஸ்டீபன் பிளமிங்குடன் கைக்கோர்க்கும் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள்…

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. டெஸ்ட் தொடங்கி T10 என போட்டிகளின் வடிவங்கள் மாறிய போதும், இதுவரையில் நாணய சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எனினும், தற்போது முதன்முறையாக நாணய சுழற்சி இல்லாமல் கிரிக்கெட் தொடரொன்றை கிரிக்கெட் அவுஸ்திரேலியா நடத்தவுள்ளது.

இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள பிக்பேஷ் லீக் தொடரில், நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை பயன்படுத்தி, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தை அணிகள் தெரிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை எவ்வாறு பயன்படுத்துவது?

நாணய சுழற்சிக்கு பதிலாக, துடுப்பாட்ட மட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்திருக்கலாம். காரணம் நாணயத்தைப் போன்று துடுப்பாட்ட மட்டையின் இரண்டு பக்கங்களும் சமனிலையாக இருக்காது. இதனால், துடுப்பாட்ட மட்டையை சுழற்றி விட்டால் நிலத்தில் விழும் போது, மட்டையின் குன்று போன்றுள்ள பகுதி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

இலங்கை அணியின் இளம் சுழல்…

எனவே, அதிகமாக அணிகள் குன்று பகுதியை கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும், இதனால் பக்கச்சார்பான முடிவுகள் கிடைக்கப்பெறும் எனவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனினும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் அறிவிப்பின் படி, குறித்த துடுப்பாட்ட சுழற்சிக்காக இரண்டு பக்கங்களும் தட்டையான அமைப்பை கொண்ட, புதிய துடுப்பாட்ட மட்டை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

இவ்வாறு சுழற்சிக்காக விஷேடமாக தயாரிக்கப்படும் துடுப்பாட்ட மட்டையின் மூலமாக, சுழற்சியினை மேற்கொள்ளும் போது, எந்த பக்கம் விழும் என்பதனை ஊகிக்க முடியாது எனவும், இதனால் பக்கச்சார்பு ஏற்படாது எனவும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

துடுப்பாட்ட மட்டை சுழற்சியை மேற்கொள்ளவுள்ள முதல் கிரிக்கெட் வீரர்

பிக்பேஷ் லீக்கின் முதல் போட்டியில் எதிர்வரும் 19ம் திகதி பிரிஸ்பேன் ஹீட்ஸ் மற்றும் அட்லெய்ட் ஸ்ரைக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில், பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஸ் லின் முதன்முறையாக துடுப்பாட்ட மட்டை சுழற்சியை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட்…

எனினும், துடுப்பாட்ட மட்டை சுழற்சியின் போது, குன்றுப்பகுதியா? (Hils) அல்லது தட்டையான பகுதியா (Flats)? என கேட்பதற்கான அணித் தலைவர் யார் என்பதுதான் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அட்லெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணியின் தலைவர் ட்ராவிஷ் ஹெட், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக, அந்த அணியின் தலைவர் யார் என்பதை இதுவரை குறித்த அணி அறிவிக்கவில்லை.

துடுப்பாட்ட சுழற்சி தொடர்பில் கிம் மெக்கோனி

இதேவேளை, துடுப்பாட்ட மட்டை சுழற்சி குறித்து கருத்து வெளியிட்ட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக்கிற்கான தலைமை அதிகாரி கிம் மெக்கோனி,  

குறித்த துடுப்பாட்ட மட்டை சுழற்சி தருணமானது பிக்பேஷ் லீக் எதனை பிரதிபலிக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தும். நாம் கொக்கபுரா (துடுப்பாட்ட மட்டை உருவாக்கும் நிறுவனம்) நிறுவனத்துடன் கலந்து சுழற்சிக்கான புதிய மட்டையை உருவாக்கியதுடன், அதனை பரிசோதித்து பார்த்துவிட்டோம்.  அது சிறப்பாக இருக்கிறது.

புதுமையை விரும்பாதவர்கள் உள்ளனர், விமர்சனம் செய்கின்றனர். எனினும் சவாலுக்கு மத்தியில் இதனை அறிமுகப்படுத்துவதுடன், இதுவொரு வரலாறாக பேசப்படும் என்பது அதிக உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<