சிடி லீக் தலைவர் கிண்ணம் நாளை ஆரம்பம்

186

கொழும்பு சிடி கால்பந்து லீக் ஏற்பாடு செய்துள்ள முன்னணி கழகங்கள் பங்கேற்கும் ஆறாவது சிடி லீக் தலைவர் கிண்ணம் 2023 தொடர் சனிக்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது.

சிடி கால்பந்து லீக், தொடர்ச்சியாக நடாத்தி வரும் இந்த தொடரில் இம்முறை ஆறாவது முறையாக இடம்பெறும் இம்முறை போட்டிகளில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதில் நடப்புச் சம்பியன் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்து கழகம், மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் மற்றும் புதிய அணியாக மாளிகாவத்த யூத் விளையாட்டுக் கழகம் என்பன போட்டியிடவுள்ளன. அனைத்து போட்டிகளும் சிடி லீக் மைதானத்தில் இடம்பெறும்.

தொடரின் ஆரம்பப் போட்டி சனிக்கிழமை (17) சோண்டர்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. முதல் சுற்று லீக் முறையில் இடம்பெறவுள்ளதுடன், தொடரை ஜூலை மாத இறுதிக்குள் நிறைவு செய்ய போட்டி ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.

சுற்றுத் தொடரில் சம்பியனாகத் தெரிவாகும் அணிக்கு 150,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 100,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன், அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீரராக தெரிவு செய்யப்படுபவருக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<