பார்சிலோனாவுக்கு விளையாட மறுப்பு தெரிவித்த ரொனால்டோ

81

மன்செஸ்டர் யுனைடட் கழகத்திடம் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2009ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்வதற்கான அரிய வாய்ப்பை ஸ்பெய்னின் முன்னணி கால்பந்து கழகமான பார்சிலோனா நூலிழையில் தவறவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

2003ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கல் நாட்டின் Sporting CP  என்ற கழகத்தில் இருந்து விலகி பிரபல மன்செஸ்டர் யுனைடட் கழகத்துடன் இணைந்து கொண்டார்.

இலங்கையில் IPL நடக்குமா? வெளியான புதிய தகவல்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை தங்கள் ….

Sir Alex Ferguson இன் பயிற்றுவிப்பின் கீழ் சுமார் 6 வருடங்கள் அந்தக் கழகத்துக்காக விளையாடிய ரொனால்டோ, உலகின் நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராக அவதாரம் எடுத்தார்.

ரோனால்டோவின் வருகையைத் தொடர்ந்து மன்செஸ்டர் யுனைடட் கழகம் UEFA சம்பியன் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், ப்ரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக 3 தடவைகள் கைப்பற்றியது

அத்துடன், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருக்கு வழங்கப்படுகின்ற Ballon d’Or விருதை முதல்தடவையாக வென்ற ரொனால்டோ, அந்தக் காலப்பகுதியில் பல்வேறு விருதுகளை வென்று அசத்தினார்

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய ஒப்பந்தத் தொகையான 80 மில்லியன் பவுண்ட்களுக்கு ஸ்பெய்னின் பிரபல ரியல் மெட்ரிட் கழகத்துடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்து கொண்டார்

எனினும், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி. ரியல் மெட்ரிட்டின் அப்போதைய பயிற்சியாளர்  Ferguson  க்கு ரொனால்டோவை, தமது பிரதான எதிரணிகளில் ஒன்றான பார்சிலோனா கழகத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் என எண்ணியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது

முன்னதாக 2008இல் ரியல் மெட்ரிட் அணியில் இருந்து எந்தவொரு சிறந்த வீரரையும் இல்லாவிட்டால் ஒரு வைரஸ் கிருமியையேனும் வேறெந்தவொரு கழகத்துக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ஆனால், அந்தக் காலப்பகுதியில் ரொனால்டோவை வாங்குவதற்கான பண பலம் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய இரண்டு கழகங்களிடம் மாத்திரம் தான் இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் நிர்வாகத்தினால் ரொனால்டோவை பார்சிலோனா கழகத்துக்கு விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்

இவ்வாறு,  Ferguson  இனால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது வெற்றியளித்து இருந்திருந்தால் அப்போதைய காலகட்டத்தில் கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இரண்டு வீரர்களும் ஒரே கழகத்துக்காக விளையாடுகின்ற அரிய சந்தர்ப்பம் கால்பந்து இரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.   

PSG இன் வளர்ச்சிக்கு பங்களித்த நெய்மாருக்கு குவியும் பாராட்டு

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான பரிஸ் செயிண்ட் ……

அதேபோல, இவ்விரண்டு வீரர்களும் பார்சிலோனா கழகத்துக்காக விளையாடியிருந்தால் இன்று வரை உலகின் முன்னணி கால்பந்து கழகமாக ஐரோப்பாவில் தனது ஆதிக்கத்தை பார்சிலோனா வைத்துக் கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை

எனினும், ரொனால்டோவை பார்சிலோனா கழகத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக வாய்ப்பு நழுவவிடப்பட்டு 11 வருடங்கள் கடந்தாலும், கால்பந்து உலகில் தற்போதும் கூட இவ்விரண்டு வீரர்களினதும் சாம்ராஜ்யம் தான் நிலைத்து இருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்

எதுஎவ்வாறாயினும். பார்சிலோனா கழகத்துடன் இணைந்துகொள்ள தான் விருப்பமில்லை என ஏகமனதாகத் தெரிவித்துதான் ரொனால்டோ ரியல் மெட்ரிட் கழகத்துடன் இணைந்து கொண்டுள்ளார். இறுதியில் அவரது விருப்பப்படி தான் ரியல் மெட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.  

சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறிய மெஸ்ஸி

கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த உலக சுகாதார பணியாளர்களின் வாரத்தை ஒட்டி பார்சிலோனா ………

இதில் குறிப்பாக ரொனால்டோ ரியல் மெட்ரிட் கழகத்துக்குச் செல்ல முன்னர் பார்சிலோனா கழகம் Pep Guardiola இன் பயிற்றுவிப்பின் கீழ் 6 முக்கிய தொடர்களின் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தது.  

இதன்காரணமாக அவர்களது முக்கிய எதிரணிகளில் ஒன்றான ரியல் மெட்ரிட் கழகத்துக்கு பார்சிலோனாவை பின்தள்ளுவதற்கான தேவை இருந்தது.  

இதன்படி, 2009இல் ரியல் மெட்ரிட் கழகம் ரொனால்டோ, Kaka   மற்றும் Xabi Alonso  உள்ளிட்ட மூவரையும் கெண்ட ஒரு பிரபல அணியாக காணப்பட்டதுடன், மறுபுறத்தில் பார்சிலோனா கழகம் samuel Eto’o என்ற வீரரை இன்டர் மிலானிடம் கொடுத்து Zlatan Ibrahimovic தமது அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்

பிஃபா தரவரிசையில் இறுதி நிலைகளுக்கு நகரும் இலங்கை அணி

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள கால்பந்து …….

இதனையடுத்து, ரியல் மெட்ரிட் கழகத்துக்காக முதல்தடவையாக ரொனால்டோ விளையாடிய 2009-10 பருவகாலத்தில் 33 கோல்களை அடித்து அசத்தினாலும், லா லிகா சம்பியன் பட்டத்தை பார்சிலோனா கழகம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டுமொத்தத்தில் ரொனால்டோமெஸ்ஸிக்கு இடையிலான போட்டித்தன்மை நாளுக்குநாள் அதிகரிப்பதற்கு, அவர்கள் வெவ்வேறு கழகங்களுக்காக விளையாடியிருந்தமை முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.  

மாறாக, இருவரும் பார்சிலோனா கழகத்துக்காக விளையாடியிருந்தால் கால்பந்து இரசிகர்களுக்கு அவர்களது உண்மையான திறமைகளை கண்டுகொள்ள முடியாமல் போயிருந்திருக்கும்.  

  >> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<