மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் ஜோர்டன்

90

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதீஷ பத்திரன ஏன் ரொனால்டோ போன்று கொண்டாடுகின்றார்?

இந்த ஆண்டுக்கான  IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதனை அடுத்து ஆர்ச்சரின் பிரதியீட்டு வீரராகவே கிறிஸ் ஜோர்டன் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

கிறிஸ் ஜோர்டன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் விடயத்தினை மும்பை அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்திருப்பதோடு, உபாதைக்குள்ளான ஆர்ச்சர் சிகிச்சைகளுக்காக இங்கிலாந்துக்கு பயணம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை பிரதியீட்டு வீரராக இணைந்திருக்கும் கிறிஸ் ஜோர்டன் IPL தொடரின் இந்தப் பருவகாலத்திற்காக எஞ்சியிருக்கும் போட்டிகள் அனைத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

ஏற்கனவே IPL போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் கிறிஸ் ஜோர்டன் மொத்தம் 28 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான அயர்லாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதேவேளை IPL போட்டிகளில் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை எதிர்கொள்ளவுள்ளதோடு, இந்தப் போட்டி இன்று (09) மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<