SLCயிடம் மிகப்பெரிய நஷ்டயீட்டுத் தொகையை கோரும் ஹதுருசிங்க

66

பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, தனது பதவிக்காலம் முடிவதற்குள் தன்னை பதவி விலக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் சபையிடம் (SLC) 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி கிட்டத்தட்ட 90 கோடி ரூபா பணத்தினை) நஷ்டயீட்டுத் தொகையாக கோரியிருக்கின்றார்.  

அழைப்பு T20 தொடரின் முதல் நாளில் ஜொலித்த டில்சாட், செஹான் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் சபை, ஒழுங்கு செய்து நடாத்தும் அழைப்பு T20 கிரிக்கெட் தொடரின்…

தான் பதவி நீக்கப்படுவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இருதரப்புக்களும் ஒத்துழையாது போன விடயத்தைக் காரணம் காட்டியே, சந்திக ஹதுருசிங்க நஷ்டயீட்டுத் தொகையினை கோரியிருக்கின்றார். 

சந்திக ஹதுருசிங்க, இவ்வாறு மிகப் பெரிய நஷ்டயீட்டுத் தொகையினை கோரியிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளரான மோஹன் டி சில்வா உறுதி செய்திருந்தார். 

”அவர் (சந்திக ஹதுருசிங்க) 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டயீட்டு தொகையாக கேட்டு கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கின்றார்.”

அதேநேரம், தன்னை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம்  தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்பட்டிருப்பதாகவும் சந்திக ஹதுருசிங்க கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, சந்திக்க ஹதுருசிங்க தனக்கு ஏற்பட்ட சம்பளப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டயீடாக கோரியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட சந்திக ஹதுருசிங்க, 2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடுத்து தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீங்குமாறு பணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சந்திக ஹதுருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாரளராக காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹரின் பெர்னாந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக மோசமான முடிவுகளை காட்டிய சந்திக ஹதுருசிங்கவிற்கு அதிக சம்பளத் தொகை கொடுக்கப்படுவதாக விமர்சித்திருந்ததோடு, அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் அரைவாசி பணத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் அணி தருவித்திருக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான இர்பான் பதான்…

சந்திக ஹதுருசிங்க பதவி விலக்கப்பட்ட பின் இலங்கை கிரிக்கெட் சபையினால், கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். 

மிக்கி ஆத்தரின் நியமனத்தோடு அடுத்த 2 வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு மாத்திரம்) ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கிரான்ட் ப்ளவர் நியமனம் செய்யப்பட்டதோடு, பந்துவீச்சு பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் டேவிட் சேக்கரும், களத்தடுப்பு பயிற்சியாளராக ஷேன் மெக்டெர்மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<