சம்பியன்ஸ் லீக்கை தோல்வியுடன் ஆரம்பித்த லிவர்பூல், செல்சி: போராடிய பார்சிலோனா

72
Champions league roundup

இந்த பருவகாலத்திற்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் எதிர்பாராத பல முடிவுகளுடன் நேற்று (17) ஆரம்பமானது. முதல்நாளில் குழு நிலையில் ஆறு போட்டிகள் இடம்பெற்றன. அதன் முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் நெபோலி 

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல், இத்தாலியின் நெபோலி அணியுடனான போட்டியில் பிந்திய நேரத்தில் விட்டுக்கொடுத்த இரண்டு கோல்கள் மூலம் சம்பியன்ஸ் லீக் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்தது.  

ஆர்சனலை வியக்க வைத்த வட்போர்ட்

ஆர்சனல் அணிக்கு எதிராக 2-0 என பின்னிலையில் இருந்த வட்போர்ட்..

இத்தாலியின் சான் போலோ அரங்கில் E குழுவுக்காக நடந்த இந்தப் போட்டியின் கடைசி நேரம் வரை இழுபறி நீடித்தது. மொஹமட் சலாஹ் மற்றும் சாடியோ மானேவின் கோல் முயற்சிகளை நெபோலி கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தார்

எனினும், 82 ஆவது நிமிடத்தில் வைத்து லிவர்பூல் பின்கள வீரர் அன்டி ரொபட்சன் தவறிழைத்ததாக நடுவர் அறிவித்ததை அடுத்து கிடைத்த பெனால்டியை கொண்டு பெல்ஜிய முன்கள வீரரான ட்ரீஸ் மெர்டன் கோல் புகுத்தினார்

இதன்மூலம் முன்னிலை பெற்ற நெபோலி போட்டி முடிவுறும் நேரத்தில் விர்ஜில் வான் டிஜ்க் விட்ட தவறை பயன்படுத்தி மற்றொரு கோலை புகுத்தியது. அந்த கோலை பெர்னாண்டோ லோரன்டே பெற்றார்

இதன்படி கடந்த 25 ஆண்டுகளில் சம்பியன்ஸ் லீக் தொடரில் நடப்புச் சம்பியன் அணியொன்று தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது. இதற்கு முன்னர் 1994 இல் .சி. மிலான் அணி இந்த நிலைக்கு முகம்கொடுத்திருந்தது

பார்சிலோனா எதிர் புருசியா டோர்ட்முண்ட்

பார்சிலோனா அணி தனக்கு எதிரான பெனால்டி வாய்ப்பை தடுத்து புருசியா டோர்ட்முண்ட்டுக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் ஆரம்ப போட்டியை சமநிலை செய்தது.  

ஜெர்மனியின் வெஸ்ட்பெலண்ஸ்டேடியம் அரங்கில் F குழுவுக்காக நடந்த இந்தப் போட்டியில் நட்சத்தி வீரர் லியொனல் மெஸ்ஸி இந்த பருவத்தில் முதல்முறை பார்சிலோனா அணிக்காக களமிறங்கினார். அதேபோன்று லா லிகா தொடரில் சோபித்து வரும் 16 வயது அன்சு பெட்டியும் பார்சிலோன அணிக்காக சம்பியன்ஸ் லீக்கில் ஆடும் இளம் வீரராக களமிறங்கினார். எனினும் பார்சிலோனாவால் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது கடினமாக இருந்தது

பதிலாக, ஜெர்மனி கழகம் பார்சிலோனா பக்கத்தை அடிக்கடி ஆக்கிரமிப்பதை காண முடிந்தது. அதன் அணித்தலைவர் மார்கோ ரியுசுக்கு 57 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பார்சிலோனா கோல் காப்பாளர் மார்க் அன்ட்ரே டெர் ஸ்டெஜன் தடுத்தார்.     

ரியுஸின் மேலும் இரு கோல் முயற்சிகளை டெர் ஸ்டெஜன் அபாரமாக தடுத்ததோடு 77 ஆவது நிமிடத்தில் ஜூலியன் பிரென்ட் மின்னல் வேகத்தில் உதைத்த பந்து வலைக்கு அருகால் பறந்தது. எனினும் போட்டி கடைசியில் கோலின்றி சமநிலையில் முடிந்தது

செல்சி எதிர் வெலன்சியா 

கடைசி நேரம் பெனால்டி கிக் ஒன்றை தவறவிட்ட செல்சி வெலன்சியா அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் ஆரம்ப போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  

U-17 பெண்கள் கால்பந்து உலகக் கிண்ணம் இந்தியாவில்

சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் (பிஃபா)..

H குழுவுக்காக செல்சியின் சொந்த மைதானமான லண்டன் ஸ்டான்ட்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் ஸ்பெயினின் வெலன்சியா அணி 74 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றது.  

டானியே பரஜோ ப்ரீ கிக் மூலம் செலுத்தி பந்தை லாவகமாக தட்டிவிட ரொட்ரிகோ மொரேனோ அந்தப் பந்தை வலையின் மேல் பகுதிக்கு செலுத்தி கோலாக மாற்றினார்

எனினும், கடைசி நேரத்தில் வெலன்சியாவுக்கு அச்சுறுத்தும் வகையில் ஆடிய செல்சிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. வெலன்சியா பின்கள வீரர் டானியெல் வாஸின் கையில் பந்து பட்டதை அடுத்து வீடியோ உதவி நடுவர் மூலம் அந்த பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.   

எட்டு நிமிடங்களுக்கு முன் பதில் வீரராக வந்த பார்க்லிக்கு அந்த பெனால்டி கிக் வழங்கப்பட்டதோடு அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.     

ஐரோப்பிய லீக் சம்பியனான செல்சி 2016 மார்ச்சில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியிடம் பெற்ற தோல்வியை அடுத்து ஐரோப்பிய தொடர் ஒன்றில் முதல் முறை தனது சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<